அஞ்சனம்

தாது நஞ்சு வகை கண்ணிடு மை; கண்மை அஞ்சனக் கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியை (கம்பராமாயணம், பாலகாண்டம்)

Anjanam

Tamil Wiktionary

அஞ்சனம்
  1. தாது நஞ்சு வகை
  2. கண்ணிடு மை; கண்மை
  3. *அஞ்சனக் கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியை (கம்பராமாயணம்
  4. பாலகாண்டம்)
  5. சலவைக் கல்
  6. அவுரி
  7. கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி அஞ்சனப்படம்.
  8. எண்திசை யானைகளுள்
  9. மேற்றிசை யானை

Winslow (1862)

அஞ்சனம் (añcaṉam) — noun
  1. Blackness, darkness, black coloring, கறுப்பு
  2. A collyrium or black paint for the eyelids, கண்ணுக்கிடுமை
  3. A black coloring or magic ointment put on the hand, &c. to assist in discovering lost, stolen, or concealed property; a species of magic, சேமப்பொருள் முதலியகாட்டுமை
  4. One of the eight elephants which support the world, being that of வருணன், regent of the west point, மேற்றிசையானை. Wils. p
  5. ANJANA
  6. Medicine for the eye when a person is bitten by a venomous snake, and also for one who has fits, கலிக்கம்
  7. A black stone, marble, சலவைக்கல். (p.)
  • அஞ்சனக்கலிக்கம் — A magic ointment rubbed on the eyes or palms of the hand of one who wishes to discover any thing lost.
  • அஞ்சனக்கல் — Sulphuret of antimony, a combustible used in fire- works, giving a blue flame. See நிமிளை. (M. Dic.)
  • அஞ்சனக்காரன் — A soothsayer, conjurer, sorcerer.
  • அஞ்சனக்கோல் — A paint brush or pencil to blacken the eyelids.
  • அஞ்சனத்திரயம் — Three species of magical ointments, viz., பூதாஞ்சனம், that which assists in discovering whether a person is possessed or not; சோராஞ்சனம், that which assists in discovering stolen property; and பாதாளாஞ்சனம், that which assists in discovering treasure buried under ground.
  • அஞ்சனபாஷாணம் — One of the thirty-two kinds of native arsenic.

Fabricius (1972)

அஞ்சனம் — noun
  1. black paint for the eye- lids, மை
  2. blackness, கறுப்பு
  3. magic ointment
  4. stain, குற்றம்
  5. the male elephant of the west
  • அஞ்சனக்கலிக்கம் — a magic salve to discover anything lost.
  • அஞ்சனக்கல் — sulphuret of antimony.
  • அஞ்சனக்காரன் — a soothsayer.
  • அஞ்சனம்பார்க்க — to discover stolen or concealed property by magic.
  • அஞ்சனவண்ணன் — Vishnu.

Tamil Moli Akarathi (1928)

அஞ்சனம் (añcaṉam)
  1. இருள், கறுப்பு, மேற் றிசையானை, ஆணவம், மை
அஞ்சனம் (añcaṉam)
  1. கறுப்பு, மேற்றிசையானை, மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அஞ்சனம் (añcaṉam) — noun
  1. < añjana
  2. Collyrium, black pigment for the eyelashes; கண்ணிடு மை. வேற்க ணஞ்சனத்தின் நீறணிந்து (திவ். சி. மடல். 10)
  3. Magic black pigment, of which there are three, viz., பூதாஞ்சனம், பாதாளாஞ்சனம், சோராஞ்சனம்; மறைபொருளைக் காட்டும் மை. அஞ்ச னங்கள் போட்டும் (பணவிடு. 15)
  4. Magic art. See அஞ்சனவித்தை. புகரிலா வதிரிச்சிய மஞ்சனம் (திருவிளை. எல்லாம். 17)
  5. Medicine for the eyes of a person bitten by a venomous snake, or of one who has fits; கலிக்கம். (W.)
  6. Blackness; கருநிறம் (பிங்.)
  7. Darkness; இருள். (W.)
  8. Dark-coloured stone; நீலக்கல். (அக. நி.)
  9. Stain, spot, fault; குற்றம். அஞ்சன நிரஞ்சனமும் (தாயு. ஆனந்த. 5)
  10. Sin; பாவம். திளைப்ப ரஞ்சனமு மற்றே (சிவதரு. சிவஞானயோ. 99)
  11. Male elephant of the West, one of aṣṭa-tik-kajam, q.v.; மேற்றிசை யானை. (சூடா.)
  12. A tree; மரவகை. சூர லஞ் சன மந்தரை (மச்சபு. அத்திரி. 5)
அஞ்சனம்¹ (añcaṉam) — noun
  1. < añjana
  2. 1. See அஞ்சனகேசி. (யாப். வி. பக். 540.)
  3. Indigo; அவுரி. (வை. மூ.)
  4. Marble; சலவைக் கல். (R.)
அஞ்சனம்² (añcaṉam) — noun
  1. Ceremonial bath, as of a deity; மந்திரபூர்வமாக நீராட்டுகை. (பொதி. நி.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அஞ்சனம்
  1. மை
  2. கண்ணுக்கிடும் மை
  3. கறுப்பு
  4. இருள்
  5. ஆணவமலம்
  6. திசையானை எட்டனுள் மேற்றிசையானை