அம்

ஆக்கப்பெயர் விகுதி beautiful Derivational Morpheme

beauty, prettiness water cruelty

Tamil Wiktionary

அம்
  1. அழகிய
  2. ஆக்கப்பெயர் விகுதி

[object Object]

Winslow (1862)

அம் (am) — noun
  1. Beauty, அழகு
  2. Water, நீர்
  3. Cloud, மேகம்
  4. A connecting particle, சாரியை, as புளியங்காய், Tamarind fruit
  5. Termination of a verb, வினையின் விகுதி, as, நானும்நீயும் வந்தனம், also of some verbal nouns, வினைப்பெயர்விகுதி, as வாட்டம், கோட்டம்.(p.)

Fabricius (1972)

அம் — noun
  1. beauty, gracefulness, அழகு
  2. an expletive
அம் — noun
  1. water நீர், as in "அம்தாழ் சடையார்" (Siva).

Tamil Moli Akarathi (1928)

அம் (am)
  1. அசைச்சொல், அழகு இடைச்சொ ல், சாரியை, தன்மை, முன்னிலையு ளப்பாட்டுப் பன்மை வினைவிகுதி (உ-ம்) வந்தனம், தொழிற் பெயர், விகுதி (உ-ம்) தோற்றம், நீர், பண் புப்பெயர்விகுதி (உ-ம்) நலம், மேகம்
அம் (am)
  1. அழகு, இடைச்சொல், காரியை, நீர், மேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்¹ (am) — noun
  1. Beauty, prettiness; அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச. 19, 5).
அம்² (am) — noun
  1. cf. ap, ambu. Water; நீர். அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35).
அம்³ (am) — part
  1. Noun suff. denoting (a) instrument, as in நோக்கம், 'the instrument of seeing'; கருவிப்பொருள்விகுதி: (b) object of the action expressed by a verb, as in நீத்தம், 'what is swum over'; செயப்படுபொருள் விகுதி: (c) subject of the action expressed by a verb, as in எச்சம், 'what remains'; வினைமுதற் பொருள் விகுதி
  2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering'; தொழிற் பெயர் விகுதி
  3. Suff. of abst. nouns, as in நலம், 'goodness'; பண்புப் பெயர்விகுதி
  4. Verb-ending denoting the 1st pers. pl., as in செய்தனம், பெரியம்; தன்மைப் பன்மை விகுதி
  5. A euphonic augment, as in புளியங்காய்; ஒரு சாரியை
  6. An expletive, as in போமினம்; ஓர் அசை. (சீவக. 1411.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்
  1. அழகு
  2. நீர்
  3. மேகம்
  4. விகுதி
  5. சாரியை