அம்மான்

Amman

Winslow (1862)

அம்மான் (ammāṉ) — noun
  1. Mother's brother, the maternal uncle, தாய்மாமன்
  2. The father's sister's husband, அத்தைகணவன். (c.)
  3. A father, தகப்பன். (p.)
  • நல்லம்மான் — Mother's brother, uncle by the mother's side.

Fabricius (1972)

அம்மான் — noun
  1. , நல்லம்மான், s. the mother's brother, maternal uncle, மாமன்
  2. father's sister's husband, அத்தை கணவன்
  3. the mother's elder brother, பெரியம்மான்
  • அம்மாமி–அம்மந்தி — maternal uncle's wife.
  • அம்மான்சேய்–அம்மாஞ்சி–அம்மான்–சேய்–ஒன்றுவிட்ட அம்மான் — colloq. , maternal uncle's son (+) , the mother's cousin.

Tamil Moli Akarathi (1928)

அம்மான் (ammāṉ)
  1. தகப்பன், மாயன்
அம்மான் (ammāṉ)
  1. பச்சரிசி, சித்திரப்பாலாவிப் பூண்டு
அம்மான் (ammāṉ)
  1. தகப்பன், மாமன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மான் (ammāṉ) — noun
  1. < id
  2. Mother's brother, maternal uncle; தாயுடன் பிறந்தவன். (பிங்.)
  3. Wife's father; பெண்கொடுத்தவன். Loc
  4. Husband of father's sister; அத்தை கணவன். Loc
  5. Father; தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220)
  6. God, as father; கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மான்
  1. தாயுடன் பிறந்தவன்? அத்தைத கணவன்
  2. பெண் கொடுத்தவன்
  3. தந்தை
  4. கடவுள்

Tamil Wiktionary

அம்மான்
  1. மாமா