அரு
உருவம் இல்லாதவை. 'உரு'வின் எதிர் பொருள் உடைய சொல் 'அரு'. இச்சொல் கடவுளையும் குறிக்கும். இச்சொல் தமிழையும் குறிக்கும்.
Aru
Tamil Wiktionary
அரு
[object Object]
Winslow (1862)
அரு (aru) — noun
- That which is formless, destitute of shape, incorporeal, spiritual, உருவமற்றது
- (fig.) Deity, the Supreme Being, கடவுள்
- Intellect, அறிவு
- Minuteness, atom, அணு. (p.)
Fabricius (1972)
அரு — noun
- (opp. to உரு) s. no shape; உருவ மற்றது
- God, கடவுள்
Tamil Moli Akarathi (1928)
அரு (aru)
- அணு, அறிவு, மாயை, காயம், உருவமற்றது, கடவுள்
அரு (aru)
- அணு, அறிவு, கடவுள், உருவமின்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரு¹ (aru) — noun
- < அருவம் < a-rūpa
- That which is formless, incorporeal; உருவமற்றது. ஒளிருமேனி யருவென்றார் சிலர் (கம்பரா. மருத். 39)
- The Supreme Being; கடவுள். (W.)
- (Šaiva.) Material cause of the world; மாயை. அரு வினி லுருவந் தோன்றி (சி. சி. 1, 27)
- (Jaina.) A heaven known as Siddha-Šīlā where Siddhas live; சித்தபதவி. அருத் தரும் அத்தரை (திருநூற். 15.)
அரு² (aru) — noun
- Leech; அட்டை. இருநிலந் தீண்டா வரு (தொல். பொ. 71, இளம்பூ.).
அரு (aru) — noun
- Sore; புண். (நாநார்த்த.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அரு
- உருவமற்றது
- கடவுள்
- மாயை
- சித்த பதவி
- அட்டை
- புண்