அருள்

(பெ) - இரக்கம் கிருபை

to bless, be favourable to, grace to bestow, to give, to provide grace, mercy, favor, benevolence

Tamil Wiktionary

அருள்
  1. கருணை
  2. இரக்கம்
  3. தயவு
  4. கிருபை
  5. அபயம்
  6. ஆசிர்வாதம்

[object Object]

Winslow (1862)

அருள் (aruḷ) — noun
  1. Grace, mercy, kindness, favor, benevolence, கிருபை
  2. The act of giving, ஈகை
  3. Power, சத்தி
  4. (fig.) Permission, command, கட்டளை. (p.)
  • அருட்கண் — A gracious eye.
  • அருட்குடையோன் — God, as benevolent, கடவுள்.
  • அருட்கொடிவேந்தன் — Argha, god of the Jainas, as a gracious sovereign, அருகன்.
  • அருட்கொடையோன் — God, as granting mercy, கடவுள்.
  • அருட்சித்தி — Quick-silver, பாதரசம்.
  • அருட்செல்வம் — Divine grace, as the true felicity, கடவுள்கடாட்சம். 2. Benevolence, kindness, or mercy to creatures, as distinguished from, பொருட்செல்வம்.
அருள் (aruḷ)
  1. –அருளு, கிறேன், அருளினேன், வேன், அருள, v. a. To be gracious to, favor, grant, bestow, கிருப்பைசெய்ய
  2. To create, உண்டாக்க
  3. To preserve, காக்க
  4. To say, சொல்ல
  5. (fig.) To command, permit, உத்தரவுபண்ண. (p.)–Note. It is used also as an auxiliary to other verbs, as செய்தருளும், graciously do it

Fabricius (1972)

அருள் — noun
  1. grace, mercy, kindness, கிருபை
  2. order, கட்டளை, ஏவல்
  3. good deeds
  • அருட்சோதி–அருள்–சோதி — (+), the light of grace of god.
  • அருள்மாரி — the shower of blessing.
  • அருட்குடையோன் — god, the gracious one.
  • அருட்கண் — gracious look.
  • அருள் நினைவு–அருணினைவு — benevo- lence.
  • அருளப்பன் — (R. C.) St. John.

Tamil Moli Akarathi (1928)

அருள் (aruḷ)
  1. ஈயென்னேவல், உமை, கொ டை, சத்தி, சாத்துவிகக் குணத்தொ ன்று அஃது கிருபை
அருள் (aruḷ)
  1. கதவு, கருணை, இரக்கம், தயவு, தயா, கிருபை, அபயம்
அருள் (aruḷ)
  1. 2/tam> - மறக்கருணை, அறக்கருணை
அருள் (aruḷ)
  1. ஈயென்னுமேவல், கிருபை, கொடை, சத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அருள்² (aruḷ) — noun
  1. Grace, mercy, favour, benevolence; கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247)
  2. Good deeds; நல்வினை. (பிங்.)
  3. Order, command; ஏவல். (திருக்கோ. 312.)
அருள்⁴ (aruḷ) — noun
  1. A tree, probably of the genus Meliaceae, having the same medicinal properties as are ascribed to the margosa; மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தா லாய் (பதார்த்த. 227).
அருள் (aruḷ) — noun
  1. < அருள்-
  2. Consort of Šiva, as the embodiment of grace; சிவசத்தி. (பொதி. நி.)
  3. Brightness of appearance; தேசு. முகத்தில் அருளில்லை. Loc
  4. Mature pomegranate tree; முதிர்ந்த மாதுளைமரம். (மூ. அ.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அருள்
  1. சிவசத்தி
  2. கருணை
  3. பொலிவு
  4. முதிர்ந்த மாதுளை மரம்
  5. நல்வினை
  6. ஏவல்