உப்பரிகை

மேல்மாடம் balcony, terrace, an upper floor of a house; upper storey கோதாவரியை ஒட்டி ஒரு பெரிய விருந்தினர் மாளிகை. நான்கு தூண்கள் மேல் அந்தரத்தில் அமைந்தது. இரு குளிர்சாதன படுக்கையறைகள். சமையலறை. நான்கு பக்கமும் உப்பரிகைகள். ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய வசதிகள். பின்பக்க உப்பரிகையில் இருந்து இதை எழுதுகிறேன். கண்ணெதிரே பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது கோதாவரி, அப்பால் தென்னந்தோப்புகள். தனிமை. இன்னும் பொருத்தமாகச் சொன்னால் ஏகாந்தம். ஏக அந்தம். (ஓர் இடம், ஜெயமோகன்)

Superficial

Tamil Wiktionary

உப்பரிகை — பெயர்ச்சொல் (Noun)
  1. மேல்மாடம்

Winslow (1862)

உப்பரிகை (upparikai) — noun
  1. [pref. உ.] An upper room or terrace, மேனிலைமாடம்.

Fabricius (1972)

உப்பரிகை — noun
  1. an upper floor of a house, a terrace, மேல்மாடம்.

Tamil Moli Akarathi (1928)

உப்பரிகை (upparikai)
  1. மேல்மாடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உப்பரிகை (upparikai) — noun
  1. cf. upa-kārikā. [T. uppariga, K. upparige.] See உபரிகை. ஆடகப்புரிசை யுப்பரிகை (மச்சபு. நைமிசா. 2).

IndoWordNet

உப்பரிகை — noun
  1. வாயிலின் முன்னே அல்லது மாடி மேலுள்ள நிழல் தரும் இடம்

பால்கனி இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உப்பரிகை
  1. மேல்மாடம், மேல்மாடி