உமணர்

உப்பு வியாபாரம் செய்பவர், வணிகர் salt merchant தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ.பரமசிவன், "உப்பு விற்பவர்களைச் சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார். (எனது இந்தியா!, ஜூனியர் விகடன், 29-பிப்ரவரி -2012)

Umanar

Tamil Wiktionary

உமணர் — பெயர்ச்சொல் (Noun)
  1. உப்பு வியாபாரம் செய்பவர்
  2. வணிகர்

[object Object]

Winslow (1862)

உமணர் (umaṇar) — noun
  1. Saltmakers, saltdealers, the caste, உப்பமைப்போர். (p.)
  • உமணத்தி — A female of the உமணர் caste. (p.)

Tamil Moli Akarathi (1928)

உமணர் (umaṇar)
  1. உப்பமைப்போர்
உமணர் (umaṇar)
  1. உப்பமைப்போர்