ஓலை

Tamil Wiktionary

ஓலை — பெயர்ச்சொல் (Noun)
  1. பனை மரத்தின் இலை.
  2. குருத்தோலை.

[object Object], [object Object]

Winslow (1862)

ஓலை (ōlai) — noun
  1. A palm leaf of any species, an ola, பனை, தெங்குமுதலியவற்றினோலை
  2. The leaf of the தாழை or wild pine-apple tree, தாழையோலை
  3. An ola letter, a written ola, a writing or document, ஏழுதுமோலை
  4. The summons of Yama, நமனோலை
  5. (p.) (சது.) Sound, ஒலி. நாளையோலையுந்தூதரும்வரின். If to-morrow the messengers of Yama come with the summons. (வைரா.)
  • ஓலைக்கட்டு — A bundle of palmyra leaves.
  • ஓலைக்கணக்கர் — Learners at school, பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்கரொலியடங்கும்புன்மாலை. The evening when the noise of learners at school ceases. (நாலடி.)
  • ஓலைக்கணாட்டு — A chip of small piece of ola.
  • ஓலைக்கண் — Scallop or indentation of a palmyra leaf.
  • ஓலைக்காந்தல் — Cinder of the ola–as burning, floating flakes, dry pieces of ola.
  • ஓலைக்குடை — An umbrella made of palm leaves.

Fabricius (1972)

ஓலை — noun
  1. a palm leaf of any species, an ola; 2 a letter written upon such a leaf, சீட்டு
  2. the summons or notice of death, இயமனோலை
  3. a female ear-ornament
  4. an umbrella made of palm leaf
  • ஓலை கொண்டுவந்தான் — he broght a message, an ola.
  • ஓலைகூற — to publish marriage bans.
  • ஓலைக்கணக்கர் — learners at school.
  • ஓலைக் குடை–ஓலை — see 5.
  • ஓலைச் சிறகு — the half of an ola.
  • ஓலைச் சுருள்–செந்திரீக்கம் — an ola letter inclosed in a .

Tamil Moli Akarathi (1928)

ஓலை (ōlai)
  1. ஒலி, கழுகு, தாழை, தெங்கு, பனை முதலியவற்றினோலை, சீட்டு
ஓலை (ōlai)
  1. ஒலி, தென்னோலை, பனையோலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓலை (ōlai) — noun
  1. Palm-leaf; பனை தென்னை முதலியவற்றினோலை. (தொல். பொ. 641.)
  2. Letter or any writing on a palmyra leaf; palmyra leaf on which something is written; ஓலைமுடங்கல். ஓலையொன்றெழு திப் பணிநீயென (சீவக. 1032)
  3. Rolled palm-leaf used as an ear ornament; காதிலணியும் ஓலைச்சுருள்
  4. Ornament worn in the lobe of the ear, as of gold often set with precious stones; காதணி. பொன்செ யோலை யொருகாது (தேவா. 1180, 10)
  5. Umbrella made of palm-leaf; ஓலைக்குடை. உறைபனி கதிர்போற்று மோலையன் (கந்தபு. தவங். 2)
  6. Charcoal-tree. See பேய்முன்னை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஓலை
  1. பனை, தென்னை முதலியவற்றின் ஓலை
  2. தாழையோலை
  3. எழுதுமோலை
  4. திருமுகம்
  5. ஆவண ஓலை
  6. சீட்டு
  7. ஓலைச் சுருள்
  8. பேய்முன்னை
  9. ஓலைப்படல்
  10. ஓலைக் குடை
  11. ஓலைக்குடல்
  12. காதணி