கணையம்

Pancreas

Winslow (1862)

கணையம் (kaṇaiyam) — noun
  1. A club in general, வளைதடி
  2. A timber placed between two elephants to prevent their fighting, யானைக் கம்பம்
  3. A desert, காவற்காடு
  4. Gold, பொன்
  5. War, போர். (p.) வன்றிறல்வெங்களிற்றினங்களிரண்டுபாலுமலையாமலிடுங் கணையமரனேபோலும். Like a large timber placed between enraged elephants to prevent their fighting

Fabricius (1972)

கணையம் — noun
  1. a club, வளைதடி
  2. a piece of timber between elephants to pre- vent their fighting, a post to which an elephant is tied
  3. a fort, கோட்டை
  4. war, போர்
  5. a kind of drum, வாத்தியவகை
  6. gold, பொன்

Tamil Moli Akarathi (1928)

கணையம் (kaṇaiyam)
  1. அம்பு, காவற்காடு, பொன், போர், யானைக்கம்பம், வளைதடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கணையம் (kaṇaiyam) — noun
  1. < கணை¹
  2. Club, used as a weapon; தண்டாயுதம். அம்பொடு கணையம் வித்தி (சீவக. 757)
  3. Curved club; வளைதடி. தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக (கந்தபு. தாரக. 157)
  4. Post to which an elephant is tied; யானைத்தூண். (சீவக. 81, உரை.)
  5. Jungle growth specially formed to serve as a protective barrier to a fort; காவற்காடு. (பிங்.)
  6. Fort; கோட்டை. அஞ்சுவர்களோ கணையத்துக்குள்ளேயிருப்பார் (ஈடு, 5, 4, 7)
  7. See கணையமரம். அவன் களிறுதாம் கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது (புறநா. 97, உரை)
  8. War; போர். (பிங்.)
  9. A kind of drum; வாத்தியவகை. (கந்தபு. கயமுகனு. 214.)
கணையம் (kaṇaiyam) — noun
  1. Gold; பொன். (யாழ். அக.)

IndoWordNet

கணையம் — noun
  1. இரைப்பைக்குக் கீழே இடது பக்கம் அமைந்துள்ள, உணவைச் செரிக்கச் செய்யும் ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும் உறுப்பு.

சுரப்பி