கண்ணாடி

உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். ( 2327.) கண்ணாடியாலான பொருள். முகம் பார்க்கும் கண்ணாடி

glass (an amorphous solid, often transparent substance, usually made by melting silica sand with various additives (for most purposes, a mixture of soda, potash and lime is added)) glass things mirror (a smooth surface, usually made of glass with reflective material painted on the underside, that reflects light so as to give an image of what is in front of it)

Tamil Wiktionary

கண்ணாடி — பெயர்ச்சொல் (Noun)
  1. உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். ( 2327.)
  2. கண்ணாடியாலான பொருள்.
  3. முகம் பார்க்கும் கண்ணாடி
  4. மூக்குக்கண் ணாடி.
  5. மின்மினி. ()

Fabricius (1972)

கண்ணாடி — noun
  1. (கண்) glass in general; a looking glass
  2. spectacles
  • கண்ணாடிச்சுவர் — a small wall with apertures.
  • கண்ணாடிபார்க்க — to look into a looking glass.
  • கண்ணாடிப் பலகை — a plank with a peeping hole.
  • கண்ணாடியாயிருக்க — to be transparent, to be very pleasing.
  • சூரியகாந்திக் கண்ணாடி — a burning glass.
  • தூரதிஷ்டிக் கண்ணாடி — a telescope, spy glass.

Tamil Moli Akarathi (1928)

கண்ணாடி (kaṇṇāṭi)
  1. உருவங்காட்டி, இஃது அட் டமங்கலத்துளொன்று
கண்ணாடி (kaṇṇāṭi)
  1. அத்தம், ஆடி, ஆதரிசனம், உருவங்காட்டி, ஒளிவட்டம், கஞ்ச னம், கஞ்சனை, சுதரிசனம், தருப்ப ணம், படிமக்கலம், பளிங்கு, புளகம், முகுரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்ணாடி (kaṇ-ṇ-āṭi) — noun
  1. + ஆடு-. [M. kaṇṇāḍi.]
  2. Mirror made of burnished gold or of any polished metal; உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327.)
  3. Glass things; கண் ணாடியாலான பொருள்
  4. Looking glass; முகம் பார்க்கும் கண்ணாடி
  5. Spectacles; மூக்குக்கண் ணாடி. Colloq
கண்ணாடி (kaṇ-ṇ-āṭi) — noun
  1. Glow-worm; மின்மினி. (பச். மூ.)

IndoWordNet

கண்ணாடி — noun
  1. உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.
கண்ணாடி — noun
  1. ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்

கலைப்பொருள்கள் கலவைத்தாது பூதக்கண்ணாடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்ணாடி
  1. உருவங்காட்டி, எண்வகை மங்கலப் பொருள்களுள் ஒன்று, முகம் பார்க்கும்