களை

பொருள் பெயர்ச்சொல் பயிர் அல்லாத தாவரங்கள்.

weed, an unwanted plant amidst those wanted defect, fault to weed, pull up, pluck out

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களை² (kaḷai) — noun
  1. < களை¹-
  2. [T. kalupu, K. kaḷe, M. kaḷa.] Tares, weeds; பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550)
  3. [Tu. kaḷe.] Defect, fault; குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா. 818, 5)
களை⁴ (kaḷai) — noun
  1. Weariness, exhaustion; அயர்வு. வேட்கையாற் களையினோடு கது மெனச் சென்று (கந்தபு. ததீசியுந். 55).
களை⁵ (kaḷai) — noun
  1. < kalā
  2. A digit of the moon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61)
  3. Beauty, splendour, glow, lustre; அழகு. முகமுங்களைக ளின்று. (தாயு. வண்ணம்.)
  4. (Mus.) The element of time-measure which specifies the various sub-divisions of akṣara-kālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 49.)

Winslow (1862)

களை (kaḷai) — noun
  1. Tares, grass, weeds, &c., among corn, or other vegetables, பயிர்க்களை
  2. Weariness, அயர்வு
  3. Splendor of countenance, glow, lustre, shining, காந்தி
  4. Beauty, handsomeness, அழகு. (c.)
  5. (p.) Dross, refuse, defect, fault, குற்றம்
  6. One of the ten தாளம், or rules for keeping time, தாளப்பிரமாணம்பத்தினொன்று
  • களைகட்ட — Weeded as corn, &c.
  • களைகொத்த — To weed.
  • களைகொள்ள — To begin to shine–as the countenance from the influence of the deity.
  • களைகொட்டு–களைகோல் — A weeding hook, களைகளையுங்கோல்.
  • களைச்சத்தகம் — A hooked kind of paddle for weeding corn, களைகளையுமாயுதம்.
  • களைஞர் — The base, villains, wretches, rogues.
களை (kaḷai)
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To strip or put off clothes, to reject clothes or jewels, &c., சீலைமுதலியகளைய
  2. (p.) To weed, pull up, extirpate, eradicate, களைபிடுங்க
  3. To exterminate, extirpate a family, foes, &c., to kill, destroy, கொல்ல
  4. To remove, expel, extrude, separate, reject, lop off; to shave the hair, the beard, &c., to pare the nails, &c., to cut or pull the hair, &c., to molt–as birds, அகற்ற
  5. [in arith.] To subtract, கணக்குக் கழிக்க. வன்சொற்களைந்து. Avoiding offensive speech–
  • புடவைகளைய — To cast off dirty or impure clothes. 2. To put off clothes –as ceremonially impure from catamenia. 3. To be subject to catamenia; i.e. not pregnant.
  • களைதல்–களைவு — Extirpation, weeding, plucking, stripping off.
களை (kaḷai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be fatigued, be exhausted with hunger, running, hard labor, from the heat of the sun, being flogged, &c., to be languid, to flag, droop, இளைப்புற
  2. To faint, swoon, சோர
  • களைத்தல்–களைப்பு — Fainting.

Fabricius (1972)

களை — noun
  1. tares weeds
  2. dross, refuse, defect, குற்றம்
  3. weariness, அயர்வு
  4. beauty, lustre, அழகு
  5. one of the ten rules for keeping time, தாளப்பிரமாணம்
  • களைகட்ட — to sound well & harmoniously as music.
  • களைக்கொட்டு — a weeding hook.
  • களைஞர் — the base, wretches, rogues.
  • களைதீர–தெளிய–ஆற — to recover from fatigue.
  • களைபிடுங்க–பறிக்க–கொத்த — to weed.
  • களையாற்ற — to revive one from fainting, to refresh.
களை — v. t.
  1. v. t. put off clothes, undress, உடைகழற்று
  2. pluck up weed, களை பிடுங்கு
  3. remove, expel, destroy, அகற்று
  4. wash or cleanse, as rice as in அரிசிகளை
  5. soften, melt as the heart, குழை
  • களைஞன் — one who weeds.
  • அரிசிகளைய — to wash rice.
  • உடை–ஆடை–களைய–களைந்துபோட — to undress oneself, to cast off dirty clothes.
  • களைவு–களைதல் — weeding, stripping off.
  • வேரறக்களைய — to root out completely, to extirpate.
களை — v. i.
  1. v. i. be fatigued or exhausted, இளைப்புறு
  2. faint, சோரு
  • களைத்தல்–களைப்பு — fainting, fatigue.
  • களைத்துவிழ–களையாய்விழ — to droop fainting; to faint away.
  • களைபோட்டுக் கிடக்க — to be or fall in a swoon.

Tamil Moli Akarathi (1928)

களை (kaḷai)
  1. அயர்வு, அழகு, களி, கசியபன் தாய், கர்த்தமன் மகள், களையென் னேவல், காந்தி, குற்றம், தாளப்பிர மாணம், பத்தினொன்று, தேவகலை, புல், மரீசீமனைவி
களை (kaḷai)
  1. அயர்வு, அழகுகளையென்னேவல் குற்றம்