கள்
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. பன்மை விகுதி பலவின் பால் அறி சொல்
toddy (from palm tree), liquor honey stealing, theft, robbery
Tamil Wiktionary
கள்
- பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது.
- பன்மை விகுதி
- பலவின் பால் அறி சொல்
- பல பால்அறி வந்த அஃறிணை கிளவி :கள்ளொடு சிவணும் அவ்இயற்பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே
- குறித்துவரு கிளவி : நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று ஆயீர் இயல புணர்நிலைச்சுட்டே
Winslow (1862)
கள் (kaḷ) — noun
- Toddy, vinous liquor, மது
- The plural termination of nouns, pronouns and verbs, பன்மைவிகுதி
- (p.) Honey of flowers, தேன்
- Stealing, theft, களவு
- Lying, falsehood, deception, பொய்
- கள்ளுக்குடியன்–கள்ளுணி–கள்ளுண்ணி — . A drinker, a tippler, a toddy-drinker, கள்ளுண்போன்.
- கள்ளுச்சேர்க்க — To gather toddy from the tree, கள்ளிறக்க.
- கள்ளுண் — A beetle, a bee, வண்டு, lit. a honey-bibber. (p.)
கள் (kaḷ) — verbal noun
- –கள்ளு>, கிறேன், கட்டேன், வேன், கள்ள, v. a. To steal, rub, திருட
- furtive designs, வஞ்சிக்க. (p.)
- கள்ளல்–கள்ளுதல் — Stealing. திருடல்.
- கள்ளாமை — The duty of avoiding theft.
Fabricius (1972)
கள் — v. t.
- v. t. weed, களைபிடுங்கு
- pluck, பறி
- rob, steal, திருடு
- deceive, வஞ்சி
கள் — noun
- toddy, கள்ளு, மது
- theft; களவு
- deception, மோசம்
- honey of flowers
- bee, தேனீ
- the plural termination of nouns, pronouns & verbs, பன்மை விகுதி
- an expletive, அசை
- கள்குடியன்–கள்ளுண்ணி — a drunkard.
- கள்ளிறக்க — to gather toddy from the tree.
- கள்ளுக்காடி — vinegar, sour toddy.
- கள்ளுவெறி — drunkenness.
- கள்விலைஞன் — a toddyseller. ( கள் விலையாட்டி).
Tamil Moli Akarathi (1928)
கள் (kaḷ)
- ஒருவண்டு, களவு, கள்ளென்னே வல், சோர்வு பன்மைவிகுதி, பொய், மது, மலர்த்தேன்
கள் (kaḷ)
- அம்மியம், அரி, அரிட்டம், அருகி, அருப்பம், அளி, அறிவழி, ஆச வம், ஆதுவம், ஆம்பல், ஆம்பிலம், ஆலி, ஆலை, இக்கு, இரேயம், ஈழம், ஏலி, கஞ்சா, கல்லியம் கவ்வை, களி, காலி, குடு, குந்தி, கொங்கு, சாதி, சாயனம், சாலி, சாறு, சிக்கர், சுண் டி, சுமாலி, சுரை, சுலோகி, சுவிகை, சுழிகை, சேறு, சொல், சொல்லிள ம்பி, சோபம், ஞாளி, தணியல், து ம்பி, தேசம், தேறல், தேன், தொ ண்டி, தொப்பி, நறவு, நனை, நாற்றம், படு, பாடலி, பாணி, பாலி, பா னம், பிரசம், பிழி, பேதை, மகர ந்தம், மட்டு, மது, மதுகரம், மதுரை, மதுவம், மருட்டம், மறவி, மாதவம், மாரி, மாலி, முண்டகம், முருகு, மேதை, மௌலி, யானம், வடி, வா மேதம், வாருணி, விகுணி, விசுளி, ணிறி, வேரி
கள் (kaḷ)
- களவு, கள்ளென்னேவல், பொய், மது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கள்² (kaḷ) — noun
- Stealing, theft, robbery; களவு. (சூடா.)
கள்³ (kaḷ) — noun
- cf. kalyā. [T. kallu, K. M. kaḷ, Tu. kali.]
- Toddy, vinous liquor; மது. கட் காதல் கொண்டொழுகுவார் (குறள், 921)
- The saccharine juice formed in flowers; honey; தேன். கள்ளார்ந்த பூங்கொன்றை (தேவா. 158, 1)
- Bee; வண்டு. கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றை யோன் (திருக்கோ. 295)
கள்⁴ (kaḷ) — part
- A plural ending; பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள், 1100)
- An expletive; அசைநிலை. சுட்டி டுங்களன்றே (சீவக. 2773)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கள்
- மது
- தேன்
- வண்டு
- விகுதி
- அசைநிலை