கேள்வி
question
Fabricius (1972)
கேள்வி — v. n.
- , கேழ்வி, v. n. hearing, கேட்கை
- obedience, கீழ்ப்படிவு
- a question, inquiry, வினா
- acquired infor- mation, கல்வி
- report, rumour, பேச்சு
- ear, காது
- bid, offer, ஏலம்
- lute, யாழ்
- ஒருவருக்குக் கேள்விகொடுக்க — to give ear or to listen to one's advice or request.
- கேள்விகேட்க — to interrogate; to question.
- கேள்விகேட்பாடு — moral control, ad- ministration of justice.
- கேள்விக் கடுதாசி–ப்பத்திரம் — written application, tenders in writing.
- கேள்விப்பட–யுற — to hear as a rumour.
- கேள்வி மறுமொழி — question and answer.
Tamil Moli Akarathi (1928)
கேள்வி (kēḷvi)
- கல்வி, இராசதகுணத்தொன்று காது, பாரமபரியம், பேச்சு
கேள்வி (kēḷvi)
- 4- அறம்-பொருள்-இன்பம்- வீடு-இந்நான்கும் கேட்டவர்
கேள்வி (kēḷvi)
- 5- அறம்-பொருள்-இன்பம்- வீடு-இந்நாற்கேள்வியோ டிவற்றின் வழிநிற்றல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கேள்வி (kēḷvi) — noun
- Hearing; கேட்கை
- Question; வினா. உபாத்தியாயர் மாணவனைக் கேள்விகேட்டார். Colloq
- Taking lessons, as in literature; listening to words of wisdom; நூற்பொருள் முதலிய கேட்கை. கேள்வியாற் றோட்கப்படாத செவி (குறள், 418)
- Learning; கல்வி. (திவா.)
- Sound; சத்தம். எழுதாக்கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 5)
- Vēda; வேதம். கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா. 2, 25)
- Treatise; நூல். கேள்வி கடுறைபோய் (சீவக. 2386)
- Word; சொல். ஏனோர் கேள்வியுங் கேள்வி (ஞானா. பாயி. 5, 6)
- Report, rumour; பிரஸ்தாபம். Colloq
- Ear, organ of hearing; காது. (திவா.)
- Hearing or trial of a case, judicial inquiry; விசாரணை. (Insc.)
- Bid, offer; ஏலம் முதலியன கேட்கை
- Pitch of a tune, keynote; இசைச்சுருதி. கிளை யாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப்பாணணும் (பு. வெ. 7, 18)
- Lute; யாழ். (அக. நி.)
IndoWordNet
கேள்வி — noun
- பதிலை அல்லது தகவலை எதிர்பார்க்கும் ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட வாக்கியம்
கலைப்பொருள்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கேள்வி
- கேட்டல்
- கற்கை
- பொருளைக் கற்றறிந்தவர் சொல்வதைக் கேட்டல்
- கல்வி
- சத்தம்
- வேதம்
- நூல்
- சொல்
- அறிக்கை
- விசாரணை
- இசைச்சுருதி
- ஏலம் கேட்டல்
- யாழ்