கோ

மூச்சையாகினார் கோ என்பது அரசன் என்று பொருள். அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.

king emperor mountain

Winslow (1862)

கோ (kō) — infinitive
  1. letter compounded of க் and ஓ
  2. A vocative particle, அழைப்புக்குறி
  3. An exclamation of success, victory, &c., கொய்யோக்குறி
  • கோகோவென்றழ — To weep loudly.
கோ (kō) — noun
  1. A king, அரசன்
  2. A man in his prime, ஆண்மகன்
  3. Greatness, superiority, மேன்மை. (சது.)
  4. (M. Dic.) The jujubee tree, இலந்தை
  • கோக்கன் — Nobles, gentlemen, இறைவர். 2. Kings, அரசர்.
  • இளங்கோக்கன் — The third class or caste of Hindus; the class next below the kings, வைசியர். (நிக.)
  • கோமகன் — A prince, a king's son, இராசகுமாரன். 2. A king, அரசன்.
  • கோமகள் — Princess, இராசகுமாரத்தி. 2. A mistress, a lady, தலைவி.
  • கோமாள் — A lady, a mistress, தலைவி.
  • கோமான் — A king, an Emperor, அரசன். 2. A superior, a lord, தலைவன். 3. A guru, a priest, குரு. 4. An elder; a person of dignity, respectability, estimation, &c., மூத்தோன்.
கோ (kō) — noun
  1. A cow, பசு
  2. A bull, ஏருது
  3. Air, ஆகாயம்
  4. Swerga or paradise, heaven, சுவர்க்கம்
  5. The earth, பூமி
  6. Water, நீர்
  7. A point of the compass, region, quarter, திசை
  8. An arrow, அம்பு
  9. Thunderbolt, the weapon of Indra, வச்சிராயுதம்
  10. An eye, கண்
  11. Any of the five sentient organs, பொறி. W. p. 297. Gô
  12. Hill, mountain, மலை
  • கோகத்தி–கோவதை — The murder of cows, or the guilt consequent on it, பசுக்கொலை; [ex hatya, killing.]
  • கோசலம் — Cow's urine in ceremonial purifications, &c.
  • கோதனம்–கோதன்னம் — A calf, பசுவின்கன்று; [ex தன்னம், a calf.]
  • கோதானம் — The gift of a cow.
  • கோபதி — A bull, (lit.) lord of cows, இடபம். 2. Indra–as king of Swerga, இந்திரன். W. p. 299. GÔPATI.
  • கோபாலர் — [pl of கோபாலன்.] Herdsmen, cow-herds, இடையர். 2. Kings, அரசர்; [ex பாலர், protectors.] W. p. 299 GÔPALA.

Fabricius (1972)

கோ — noun
  1. a king, an emperor
  2. a great man, greatness
  3. a man in his prime
  4. a father
  5. a potter, குயவன்
  6. an interjection expressive of grief
  • கோகோவென்றழ — to weep aloud.
  • கோவென்று கூப்பிட — to cry or call aloud.
  • கோமகன் — ( கோமகள்) a prince, a king's son; 2. a king.
  • கோமான்–கோன் — a king, a priest, a master, a superior, a dignitary, a notable, a distinguished person- age.
கோ — noun
  1. a cow, பசு
  2. heaven, para- dise, சுவர்க்கம்
  3. air, ஆகாயம்
  4. the earth, பூமி
  5. Indra's thunderbolt
  6. an arrow
  7. water
  8. ray, கிரணம்
  9. the eye, கண்
  • கோகத்தி–கோவதை — the crime of killing a cow.
  • கோசலம் — cow's urine used in ceremo- nial purification.
  • கோதானம் — the gift of a cow.
  • கோபாலன் — ( கோபாலர்) a cowherd; கோபாலகன்; 2. Krishna, the pro- tector of cows.
  • கோமயம்–கோமியம் — cow-dung, cow's urine.
  • கோமாரி — a disease among cattle.
கோ — v. t.
  1. v. t. (com. கோர்), string pearls, beads etc, கோவைசெய்
  2. thread a needle
  3. clasp, join, தொடு
  4. compose, arrange, ஒழுங்காக்கு
  5. fabricate (as stories) கதைகட்டு
  6. put on, wear; தரி
  7. oppose, resist, தடு, எதிர். கோப்பு, v. n. stringing, arranging, manner, method
  • கோவை–கோர்வை — a string of beads, flowers etc. 2. a kind of poem; 3. series, row; 4. a climbing plant.
  • கோர்வையாணி — pegs for joining rafters together.
  • ஔவைக்கோவை — a poem of Avvyar.
  • கற்கோவை–மணற்–கோவை — different kinds of creeper.
  • கைகோக்க–கை — see under .
  • கைக்கோர்வை — joint-hands, a cord of gold thread.

Tamil Moli Akarathi (1928)

கோ (kō)
  1. அம்பு, அரசன், ஆகாயம், ஆண் மகன்,இடியேறு, இரக்கக் குறிப்பு, இலந்தை, உரோமம், ஏருது, ஓரெ ழுத்து, கண், கிரணம், கோவென் னேவல், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம், தேவலோகம், நீர், பசு, பசுப்பொது, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வா ணி, வெளிச்சம்
கோ (kō)
  1. அம்பு, அரசன், ஆகாயம், ஆண்ம கன், ஏருது, ஓர்வகை யெழுத்து, கண், கோவென்னேவல், திசை, தெ ய்வலோகம், நீர்பசு, பசுப்பொது, பூமி, மலை, வச்சிராயுதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோ
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (க்ஃஓ)
  2. இறை வன்
  3. பேரரசன்
  4. அரசன்
  5. தந்தை
  6. தலைமை
  7. மலை
  8. குயவன்
  9. பசு
  10. எருது
  11. தேவலோகம்
  12. வானம்
  13. பூமி
  14. திசை
  15. கதிர்
  16. சூரியன்
  17. சந்திரன்
  18. வச்சரப்படை
  19. அம்பு
  20. கண்
  21. சொல்
  22. மேன்மை
  23. நீர்
  24. இரசம்
  25. இலந்தைமரம்
  26. இரங்கற்குறிப்பு. கோக்கதவு - பெரிய கதவு. கோக்கலம் - வெண்கலப் பாத்திரம். கோக்காமரம் - கடலிற் செலுத்தும் வகைகளில் ஒன்று
  27. தூக்குமரம். கோக்காலி-ப௱த்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஓட்டி அமைக்கப்படும் சட்டம்
  28. நெட்டையானவள்
  29. போரிலிருந்து வைக் கோலைக் கோத்தெடுக்கும் கருவி. கோக்குஞ்சம் - அம்பறாத்தூணி. கோகடம் - முயல்வகை

Tamil Wiktionary

கோ
  1. இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோ¹ (kō)
  1. The compound of க் and ஓ.
கோ³ (kō) — noun
  1. perh. gō-mān masc. nom. sing. of gō-mat. [M. kō.]
  2. Emperor; சக்கரவர்த்தி. கோக்கண்ட மன்னர் குரைகடற் புக்கிலர் (தமிழ்நா. 126)
  3. King; அரசன். (பிங்.)
  4. Great man, eminent person; பெருமையிற் சிறந்தோன். (பிங்.)
  5. Father; தகப்பன். நின்கோ வரினு மிங்கே வருக (கலித். 116)
  6. Leadership, domination; தலைமை. ஐவர் வந்து கோச்செய்து குமைக்க (தேவா. 997, 6)
  7. cf. gōmanta. Mountain; மலை. கோக்க டோறு மின்வாள் வீசி (சிவப்பிர. வெங்கைக்கலம். 84)
  8. [K. kōva.] Potter; குசவன். மூதூர்க் கலஞ்செய் கோவே (புறநா. 256, 7)
கோ⁴ (kō) — noun
  1. < gō
  2. Cow; பசு. (பிங்.)
  3. Bull; எருது. ஒரு கோவை யேறி (இலக். வி. 907, உரை)
  4. Heaven; சுவர்க்கம். உயர்கோவைத் தரு கோவை (இலக். வி. 907, உரை)
  5. Aerial region, sky; ஆகாயம். (பிங்.)
  6. Earth; பூமி. (பிங்.)
  7. Cardinal points, direction; திசை. (பிங்.)
  8. Ray, beam; கிரணம். (பிங்.)
  9. Thunderbolt, as the weapon of Indra; வச்சிராயுதம். (பிங்.)
  10. Arrow; அம்பு. (பிங்.)
  11. Eye; கண். கோலானைக் கோவழ லாற் காய்ந்தார் (தேவா. 520, 7)
  12. Speech, word; சொல். (பிங்.)
  13. Water; நீர். வரு கோவைச் சூடி (இலக். வி. 907, உரை)
  14. Sap, juice; இரசம். (தைலவ.)