சருகு

காய்ந்த இலை dried or withered leaf ஒர் இலையின் ஏழாவது கடைசிப் பருவம். மற்ற ஆறு பருவங்கள் குருத்து, அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு என்பதாகும்.

Garment

Tamil Wiktionary

சருகு — பெயர்ச்சொல் (Noun)
  1. காய்ந்த இலை

[object Object]

Winslow (1862)

சருகு (caruku) — noun
  1. Dry leaves, rubbish, &c., உலர்ந்தவிலை.
  • சருகரிக்க — To separate rubbish from dried leaves with the hands. சருகரிக்கநேரமின்றிக்குளிர்காயநேரமில்லை. There is time for gathering dry leaves for fuel, but none for warming one's self (they burn so soon); i. e. One cannot enjoy the fruit of his labor, the time of life is so short.
  • சருகட்டை — A kind of leech found on trees, மரவட்டை.
  • சருகாமை — The black land-turtle.
  • சருகுணி–சருகுண்ணி — A wood- tick. See உண்ணி.
  • சருகுசன்னாயம் — A light coat of armor, இருப்புச்சுவடு. (B.)
  • சரகுசாதனங்கள் — Vouchers written on palm leaves. (R.)

Fabricius (1972)

சருகு — noun
  1. dry leaves, rubbish, உலர்ந்த இலை
  2. betel leaf, வெற்றிலை
  • சருகட்டை — a millipede.
  • சருகரிக்க — to gather fallen leaves etc.
  • சருகாக — to become dried as leaves, to become emaciated.
  • ஆள் வியாதியால் சருகாய் விட்டான்–சருகாகி விட்டான் — the person has become emaciated on account of illness.
  • சருகு சன்னாயம் — a light coat of mail.
  • சருகு சாதனங்கள் — vouchers on palm leaves or olas.

Tamil Moli Akarathi (1928)

சருகு (caruku)
  1. உலர்ந்த இலை
சருகு (caruku)
  1. உலர்ந்தயிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சருகு¹ (caruku) — noun
  1. perh. šṛ. [K. taragu.]
  2. Dried leaf; உலர்ந்து வற்றிய இலை. ஒலியா லசையச் சருகெழ (வெங்கைக்கோ. 173)
  3. Betel leaf; வெற்றிலை. Loc
சருகு² (caruku) — noun
  1. See சரி⁵
  2. Nāñ

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சருகு
  1. உலர்ந்து வற்றிய இலை
  2. வெற்றிலை
  3. கைவளை
  4. கூட்டம்