தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திங்கள் முதலாம் நாள் Fruit tray kept on Tamil new year's day; the first day of the month of Chithirai தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல் தமிழ்நாட்டின் கொங்கு பகுதி மற்றும் கன்னியாகுமரி முதலிய இடங்களில் மரபு. கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளை அலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும் வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர். கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும். (சித்திரை விசு கனிகாணல், தினமணி, 14 ஏப் 2010)
actress