சிற்றுண்டி

சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகள். முறையான உணவு வேளைகளுக்கு இடையில் உண்ணப்படுவது. உதாரணம் அடிக்கடி எனது தாயார் ருக்மணி அருணாசலம் தாதர் எங்களிடம் கூறுவது "நொறுக்குத் தீனி தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம்" - என்ற தமிழ் பழமொழி பற்றி தான்.

snack, light food eaten between meals

Tamil Moli Akarathi (1928)

சிற்றுண்டி (ciṟṟuṇṭi)
  1. அப்பவருக்கம் ஒருபண்ணி காரம், பலமூலசாகவுணா, பொறிக்கறி
சிற்றுண்டி (ciṟṟuṇṭi)
  1. அஃகுல்லி, அப்பம், இடி, பிட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிற்றுண்டி (ciṟṟuṇṭi) — noun
  1. < சிறு-மை + உண்டி
  2. Pastry, cake; பண்ணிகாரம். (பிங்.)
  3. Sweet pastry-ball made of rice or wheat flour; தித்திப் புள்ளதாய் உருண்டையாயிருக்கும் பண்ணிகாரவகை. அப்பங்கலந்த சிற்றுண்டி (திவ். பெரியாழ். 2, 4, 5)
  4. Light refreshment; இலேசான உணவு
  5. Abstemious meal; சிற்றளவான உணவு

IndoWordNet

சிற்றுண்டி — noun
  1. இட்லிம் வடை போன்ற உணவு வகை.
சிற்றுண்டி — noun
  1. மது குடிக்கும் சமயம் உண்ணப்படுகிற சுவையான தின்பண்டம்

உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் சிற்றூண் சிற்றுணவு சில்லுணா சிறுதிண்டி நொறுவைப்பண்டம் இலகுபஷணம் லகுபட்சணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிற்றுண்டி
  1. சிறு அளவான உணவு, எளிய உணவு
  2. இனிப்பு உணவுவகை
  3. பலகாரவகை, பண்ணி காரம்