செய்வினை

Tamil Wiktionary

செய்வினை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகம்
  2. தன் நிலையிலிருந்து ஒரு வினைச்சொல் பயன்படுவது

[object Object]

Tamil Moli Akarathi (1928)

செய்வினை (ceyviṉai)
  1. சூனியம், செய்கை, செய் தொழில், நடவா முதலிய முதனிலை களை யுடையன வாய்ப்படுவிகுதி புணராது ஏழுவாய்க் கருத்தாவைக் கொண்டு முடியும் வினைச்சொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்வினை (cey-viṉai) — noun
  1. +
  2. Work, undertaking; செய்யுந் தொழில். செய்வினை தூய்மை (குறள், 455)
  3. Karma; முற்பிறப்பிற் செய்த கரு மம். சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரி தால் (திவ். திருவாய், 4, 7, 1)
  4. (Gram.) Verb in active voice; வினைமுதல்வினை. (இலக். கொத். 67.)
  5. Witchcraft, sorcery; பில்லிசூனியம். Colloq

IndoWordNet

செய்வினை — noun
  1. வினை வாயிலாக எழுவாயைக் குறிப்பிடக்கூடிய வாக்கியம்

வாக்கியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய்வினை
  1. வினைமுதல் வினை
  2. முற்பிறப்பில் செய்த கருமம்
  3. பில்லிசூனியம்
  4. செய்யுந் தொழில்