சே

Tamil Wiktionary

சே — பெயர்ச்சொல் (Noun)
  1. சிவப்பு
  2. உயர்வு
  3. எருது
  4. விலங்கேற்றின் பொது (விலங்குகள் உடலால் புணரச் செய்வது விலங்கேற்று)
  5. ஒரு மரம் (அழிஞ்சில் மரம்).
  6. எதிர்மறை
  7. ச்+ஏ என்னும் மெய் எழுத்தின்
  8. உயிர் எழுத்தின் சேர்க்கையில் உருவான உயிர் மெய்யெழுத்து.

[object Object]

Winslow (1862)

சே (cē)
  1. letter compound of ச் and ஏ.
சே (cē) — noun
  1. Red, redness, சிவப்பு
  2. Bull, bullock, ox, ஏருது
  3. The male of some animals, சிலவிலங்கினாண்
  4. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)
  5. A repeated sound expressive of driving, ஒலிக்குறிப்பு
  6. The name of a tree. (See அழிஞ்சில்.)
  7. The சேரான், or செங்கோட்டை tree, Semicarpus anacardium, L. S. High, உயர்ந்த.(p.)
  • சேதா — A reddish cow, சிவந்தபசு.
  • சேதாம்பல் — Red ஆம்பல் flower.
  • சேவடி — Red feet, சிவந்தபாதம்; [ex அடி.] (p.)
  • சேமணி — A bell tied to the bullock's neck, ஆன்மணி. 2. [in love poetry.] One of the annoyance of lovers, காமப்பகை.
  • சேமறி — Copulation of a bull and cow, மாட்டின்சையோகம்; [ex மறி, stopping.] (p.)
  • சேங்கன்று — A bull calf, ஆண்கன்று.

Fabricius (1972)

சே — noun
  1. (see செ) red, redness, சிவப்பு
  2. male of some animals
  3. the சேரான் or சேங்கொட்டை tree, semicarpus anacardium
  4. a pull, bullock, ox
  5. Taurus of the Zodiac, இடபராசி
  6. adj. high, உயர்ந்த
  • சேங்கன்று — a bull calf.
  • சேங்கொட்டை–சேரான் — the kernel of the tree.
  • சேதா — a reddish cow.
  • சேதாம்பல் — the red water lily.
  • சேமணி — a bell tied to the bullock's neck.

Tamil Moli Akarathi (1928)

சே (cē)
  1. அழிஞ்சில்மரம், இடபவிராசி, உ யர்ந்த ஏதிர்மறை, ஏருது, ஒலிக்குறி ப்பு, ஓரெழுத்து, சிவப்பு, சேரான் மரம், செவென்னேவல் விலங்கேற் றின் பொது
சே (cē)
  1. ஏருது, குதிரை, புல்வாய்
சே (cē)
  1. இடபவிராசி, ஏருது ஓர்வகையெ ழுத்து, ஓர்மரம், சிவப்பு, சேவென் னேவல், விலங்கேற்றின்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சே¹ (cē)
  1. The compound of ச் and ஏ.
சே⁴ (cē) — noun
  1. < சே³-
  2. [T. ce.] Red, redness; சிவப்பு. சேக்கொள் கண்ணை (கல்லா. 85, 9)
  3. See செங்கோட்டை. (மலை.)
  4. Sage-leaved alangium. See அழிஞ்சில். (தொல். எழுத். 278.)
சே⁵ (cē) — noun
  1. perh. சே²-
  2. Bull, bullock, ox; காளை. சேவேறு சேவடிக்கே சென்றூதாய் (திருவாச. 10, 1)
  3. Taurus in the zodiac; இடப ராசி. (விதான. நல். 12.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சே
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் ஏ)
  2. காளை
  3. இடப ராசி
  4. சிவப்பு
  5. சேமரக்கொட்டை
  6. அழிஞ்சில்மரம்
  7. வெருட்டுங்குறி
  8. வெறுப்புக்