தனு

தனுராசி சிறுமை நான்கு கரங்கொண்ட நீட்டலளவை

Tanu

Tamil Wiktionary

தனு
  1. உடல்
  2. வில்
  3. தனுராசி
  4. சிறுமை
  5. நான்கு கரங்கொண்ட நீட்டலளவை
  6. எருத்தின் முக்காரம்
  7. மார்கழி மாதம்
  8. ஊன்றிப் பேசுகை
  9. தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி

Winslow (1862)

தனு (taṉu)
  1. [prov.] (probably a change of தொனு.) Bellowing of a bull, முக்காரம்
  2. Stress of voice, accent, emphasis in speaking ஊன்றிப்பேசுகை
தனு (taṉu) — noun
  1. A bow, வில்
  2. Sagittarius of the Zodiac, தனுவிராசி. W. p. 437. DHANU
  3. Smallness, minuteness, delicateness, subtleness, சிறுமை
  4. Body, either of creatures or as assumed by the deity. உடல். (Sa. Danu.)
  5. Daughter of Daksha, wife of Casyapa, and mother of the Danavas, தக்கன்மகள். (p.)
  • தனுக்கோடி–தனுஷ்கோடி — A sacred bay at Rameseram, said to have been opened by Rama with his bow, சேதுதீர்த்தம். (c.)
  • தனுசாத்திரம் — The art of using the bow or weapons in general.
  • தனுசாரி — A name of Indra, இந்திரன். 2. (also தானவாரி.) Vishnu, திருமால்.
  • தனுரசம் — Perspiration, வியர்வு.
  • தனுரணம்–தனுவிரணம் — A pimple, சினைப்பு.
  • தனுவித்தை–தனுர்வித்தை — The art or practice of archery.

Fabricius (1972)

தனு — noun
  1. bellowing of a bull
  2. stress of voice, accent, emphasis in speaking
தனு — noun
  1. a bow, a cross-bow, வில்
  2. Sagittarius of the Zodiac, தனுவிராசி
  3. body, உடல்
  4. smallness, சிறுமை
  5. daughter of Daksha, wife of Kasyapa and mother of the Danavas. தனுக்கோடி, a sacred bay at Rames- waram said to have been opened by Rama's bow, தனுஷ்கோடி, சேது தீர்த்தம்
  • தனுசன்–தனு–சன்–குமாரன் — (, body+, one born), a son, , ( தனுசை, a daughter).
  • தனுசர்–தனு — Asuras, Danavas, as born of 5.
  • தனுசாரி–திருமால் — a name of Indra; 2. Vishnu, .
  • தனுரசம்–வியர்வை — perspiration, .
  • தனுரணம்–விரணம்–சினைப்பு — a pimple, .
  • தனுவித்தை–தனுர்வித்தை — the art or practice of archery.

Tamil Moli Akarathi (1928)

தனு (taṉu)
  1. அத்தி, உடல், ஓரிராசி, காசிபர் மனைவி, சிறுமை, தங்கன்மகள், தான வர்தாய், தோல், பெண், முக்காரம், வில், கசியபன்பாரி, தக்ஷப்பிரசாப திமகள், இவள், வழி, வந்தோர் தா னவரெனப்படுவர்
தனு (taṉu)
  1. உடல், சிறுமை, வில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தனு¹ (taṉu) — noun
  1. < tanu
  2. Body; உடல். தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108)
  3. Smallness, minuteness, delicateness, subtleness; சிறுமை. (பிங்.)
தனு² (taṉu) — noun
  1. Wife of Kāšyapa and mother of the Asuras; அசுரர்க்குத் தாயான காசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள் (கம்பரா. சடாயுகாண். 26).
தனு³ (taṉu) — noun
  1. < dhanus
  2. Bow; வில். தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங். 226)
  3. Sagittarius in the Zodiac; தனுராசி. (சிலப். 17, பக். 453.)
  4. See தனுர்மாதம்
  5. A linear measure 4 karam, as the length of a bow; 4 கரங்கொண்ட நீட்டலளவை. கரமோர் நான்கு தங்குக றனு (கந்தபு. அண்டகோ. 6)

IndoWordNet

தனு — noun
  1. கஷ்யப்பின் விவாகமான தட்சனின் மகள்

புராணகால பெண் தொன்மைகால பெண்