தம்

த் + அம் தம் இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை

their, one's selves your, thine breath drawn in or held (during exertions)

Tamil Wiktionary

தம் — பெயர்ச்சொல் (Noun)
  1. இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
  2. உடல் வலிமை தேவைப்படும் கடினமான செயல்களுக்கு மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்; மூச்சடக்குகை
  3. மூச்சு
  4. புகைப் பிடிக்கையில் புகையை ஒருமுறை உள்ளிழுத்து வெளிவிடுதல்
  5. சதம்

Winslow (1862)

தம் (tam) — noun
  1. Oblique of தாம்–as தம்பொருள், their property
  2. A poetic expletive used with the third person plural, சாரியையிடைச்சொல் –as அமரர்தங்குழு, the multitude of celestials
  • தங்குடிச்சுற்றம் — Paternal relations, kinsmen, உறவினர்.
  • தங்குடித்தமர் — Paternal relations on when devolves the duty of performing the funeral rites and protecting the family after the death of the father. See தாயத்தார்.
  • தங்குலம்வெட்டி — One destructive to his own family.
  • தம்பால் — With them or to them.
  • தம்மவன்‌ — A relative, தமன். (p.)
  • தம்மனை — A mother, தாய். (p.)
தம் (tam) — noun
  1. A wife, மனைவி. (p.) தம்பதி. Husband and wife.

Fabricius (1972)

தம்
  1. e of தாம், their (as தம் பொருள், their property)
  2. a poetic expletive (used with 3rd person plural), ஓர் சாரியை
  • தம்மவன்–தம்–அவன் — (+) a relative.
  • தம்மனை–தம்மை–தாய் — a mother, .
  • தம்முன் — an elder brother.
  • தங்குடிச்சுற்றம் — paternal relations, kinsmen.
  • தங்குடித்தமர் — paternal relations on whom devolves the duty of performing the funeral rites and protecting the family after the death of the father.

Tamil Moli Akarathi (1928)

தம் (tam)
  1. அசைச்சொல், கொடை, சாரியை தற்காத்தல், நன்முகுர்த்தம், பங்கிடு தல், புண்ணியம், மகரவாக்கிய நா ன்கினொன்று, மனையாட்டி
தம் (tam)
  1. அன்பு, பிறப்பு
தம் (tam)
  1. சாரியை, (உ-ம்.ஏல்லார்தம்மையும்)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தம்¹ (tam) — part
  1. Flexional increment generally used along with the nouns of third pers. pl.; பெரும்பான்மை படர்க்கைப்பன்மை யுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல். எழுத். 191).
தம்² (tam) — noun
  1. dam. Colloq
  2. Holding the breath; மூச்சடக்குகை
  3. Breath; மூச்சு. அவன் தம் பிடிக்கிறான்