தா

;பொருள் வருத்தம் தாக்குதல்

to give

Tamil Wiktionary

தா — பெயர்ச்சொல் (Noun)
  1. கொடுத்தல் (தா - ஒத்தவனுக்குத் தருதல்) (ஈ - தாழ்ந்தவனுக்குத் தருதல்) - தொல்காப்பிய விளக்கம் (வினைச்சொல்)
  2. தாவு (வினைச்சொல்)

Winslow (1862)

தா (tā)
  1. A syllabic letter of த் and ஆ combined.
தா (tā) — noun
  1. Hostility, பகை
  2. Pain, distress, affection, வருத்தம்
  3. Decay, destruction, கேடு
  4. Strength, force, வலி
  5. Fault, defect, blemish, குற்றம்
  6. Attacking, jumping at, towards, upon, over, &c., தாண்டுகை. (p.) தாவிலை. It is faultless, uninjured, not defective, unobjectionable; [ex இலைஇல்லை.]
தா (tā)
  1. , தருகிறேன், தந்தேன், தருவேன், தர, v. a. To give as equals, ஒப்போனுக்குத்‌தர
  2. To give, in general not to a third person, கொடுக்க
  3. To grant, to bestow, அருள
  4. To yield, produce, bring forth, கனிகொடுக்க
  5. To apportion, distribute, allot, assign, appropriate, பகிர்ந்துகொடுக்க
  6. To convey a meaning, to mean, as words, பயன்தர
  7. To create, make; to form, construct, படைக்க
  8. To beget, generate, procreate, மகவைப்பெற
  9. To produce, as an author, நூல்செய்ய
  10. To impart, to furnish, to supply, சேகரிக்க
  11. To emit, to give out, ஊற. –Note. தரல், in poetry is, as an auxiliary, joined to the root of other verbs–as புறந்‌தரல், turning the back before an enemy, &c., ஏழுதரல், for ஏழுந்திருத்தல், rising up, போதரல், for போதல், going; பின்றரல் for பின்றல், withdrawing, retiring. தருகிறவன்ஒருவன்இருக்கிறான். There is one providing God
  • தந்தவன் — A father. (p.)
  • தருமதி — A due, in money, goods, &c., commonly a balance or remainder.

Fabricius (1972)

தா — noun
  1. hostility, பகை
  2. pain, distress, வருத்தம்
  3. fault, குற்றம்
  4. strength, force, வலி
  5. destruction, decay, நாசம்
  6. attacking, jumping at, towards etc. தாண்டுகை
  • தாவிலை — it is faultless, not defective.
தா — irreg. tr. verb
  1. t. of the irreg. tr. verb தருகி றேன் (vul. தாறேன்) தந்தேன், தரு வேன், தர, give, grant, bestow, கொடு
  2. produce, கனிகொடு
  3. make, create படை
  4. generate, பெறு
  5. emit give out. Note தரல் in poetry is joined as an auxiliary to the root of other verbs as in புறந்தரல், turning the back before an enemy, போதரல் for போதல், going etc
  • தந்தவன் — . a father.

Tamil Moli Akarathi (1928)

தா (tā)
  1. அழிவு, ஓரெழுத்து, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், தாவென் னேவல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்
தா (tā)
  1. ஓர்வகையெழுத்து, கேடு தாண்டு தல், தாவென்னேவல், பகை, வருத் தம், வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தா¹ (tā)
  1. compound of த் and ஆ.
தா³ (tā) — noun
  1. < தாவு-
  2. Strength, might; வலிமை. தாவே வலியும் வருத்தமு மாகும் (தொல். சொல். 344)
  3. Pain, distress, affliction; வருத் தம். தாவிடுமி னென்றான் (சீவக. 749)
  4. Decay, destruction; கேடு. (தொல். சொல். 344, உரை.)
  5. Attacking, rushing, jumping; பாய்கை. கருங் கட் டாக்கலை (தொல். சொல். 344, உரை)
  6. Hostility; பகை. (சூடா.)
  7. Fault, blemish; குற்றம். தாவில் வெண்கவிகை (கம்பரா. கோலங்காண். 1)
  8. Defect, deficiency; குறை. தாவரும்பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள். 40)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தா
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (த்*ஆ)
  2. வலிமை
  3. : வருத்தம்
  4. கேடு
  5. குற்றம்
  6. பகை
  7. பாய்கை
  8. குறை