தாரை

Tamil Wiktionary

தாரை
  1. கண்மணி
  2. அன்புக்குரியவர்
  3. வரிசை
  4. கோடு
  5. வழி
  6. அடிச்சுவடு
  7. நேரே ஓடுகை
  8. குதிரைக்கதி; குதிரை நடை
  9. நீண்ட ஊதுகுழல்
  10. (இசைக்கருவி)
  11. நீர்வீசுங் கருவி; நீர்பீய்ச்சுங் கருவி

Winslow (1862)

தாரை (tārai) — noun
  1. Row, range, line, series, stripe, streak, ஒழுங்கு. (Compare சாரை.)
  2. A long trumpet or pipe, ஏக்காளம்
  3. A smaller trumpet, சிறுசின்னம்
  4. Way, road, வழி
  5. Heavy rain falling in large drops, மழைத்தாரை. (c.)
  6. Stream of water poured on the right hand of the receiver in making grants or donations, also in giving a wife in marriage, &c. (See தத்தம்.)
  7. Flowing as water from a pipe and in pencils, as gum from a tree, or as rain; also a course, as the flowing of arrows. the running of a horse or of a stream, பாய்கை. (Sa. D'ha'ra'.)
  8. Apple, or pupil of the eye, கண்மணி. (See தாரகை.)
  9. Eye, கண்
  10. Point, edge; sharp or cutting side of an army, the banner-detachment. கொடிப்படை
  11. The wheel-like weapon, சக்கராயுதம்
  12. Tongue, நா
  13. Running in a straight course, நேரோடுகை
  14. Star, விண்மீன்
  15. Strength, vigor, force, power, வலி
  16. A wife, மனைவி. (See தாரம்.)
  17. Wife of Bhali, வாலியின்மனைவி
  18. Wife of Jupiter, priest of the gods, வியாழன்மனைவி. (See தாரா. Sa.)
  19. Cloth, சீலை. (சது.) தாரைதாரையாய்ப்போகிறஏறும்பு. The emmets going in rows. வானத்தில்நீர்த்தாரையிட்டிருக்கிறது. There are in the sky clouds surcharged with rain
  • தாரைகவணி — A very fine kind of striped muslin. (R.)
  • தாரைதாரையாய்மழைபெய்ய — To rain in torrents, to stream down.
  • தாரைதாரையாயோட — To run or gush out in a straight stream.
  • தாரைப்பட்டு — Striped silk.
  • தாரையூத — To blow a trumpet.
  • தாரைவார்த்தல் — Pouring water by a donor, on the right hand of the donee, in making a grant. &c. 2. (fig.) To lose a thing (spoken in grief) (c.)

Fabricius (1972)

தாரை — noun
  1. row, range, line, ஒழுங்கு, சாரை
  2. a long trumpet or pipe, எக்காளம்
  • தாரை தாரையாய்ப் போகிற–ச்சாய்கிற–எறும்பு — ants, running in rows.
  • தாரையூத — to sound a trumpet.
தாரை — noun
  1. heavy rain falling in torrents
  2. water poured in making a gift
  3. a wife, a star
  4. the pupil of the eye, கண்மணி; the eye, கண்
  5. point edge, கூர்மை
  6. cloth, சீலை
  7. the van of an army, கொடிப்படை
  8. the tongue, நா
  9. strength, force, power, வலி
  10. fame, கீர்த்தி
  11. a course as the running of a horse or of a stream, பாய்கை
  12. way, வழி
  13. the wife of Vali, வாலி மனைவி
  14. wife of Jupitar, வியாழன் மனைவி
  • வானத்திலே நீர்த்தாரை யிட்டிருக்கிறது — there appear in the sky clouds surcharged with rain.
  • தாரைதாரையாய் ஓட — to gush out in a straight stream.
  • மழை தாரை தாரையாய்ப் பொழிகிறது — it rains in torrents.
  • தாரை வார்த்துக் கொடுக்க–த்தத்தம் பண்ண — to give away by pouring water into the right hand of the receiver, to bequeath.
  • கண்ணீர்த் தாரை — a flood of tears.
  • தாரோபசங்கிரகம் — marrying.

Tamil Moli Akarathi (1928)

தாரை (tārai)
  1. அபிஷேகம், ஒப்பு, ஒழுங்கு, கண், கண்மணி, காளம்,கீர்த்தி, குதி ரைநடை, கூர்மை, கொடிப்படை, சக் கராயுதம், சந்ததி, சலதாரை, சிறுசின் னம், சீலை, தத்தம்பண்ணுநீர், திகிரி, திரள், நா, நேரோடல், பஞ்சகன்னி யரி லொருத்தியான சுரகுருபன்னி, படையின் முன்னணி, பண்டியுருள், பாய்தல், பெருமழை, மலைச்சாரல், மழை, மனைவி, வலி,வழக்கம், வழி, விண்மீன், ஓரப்சரசை, பிருகஸ்பதி பாரி இவள் சந்திரனை சோரமார்க் கத்தி கூடிப் புதனைப் பெற்றவள்
  2. தாரன் புத்திரி, வாலிபாரி, அங்கதன் தாய்
தாரை (tārai)
  1. ஒழுங்கு, கண், கண்மணி, காளம், கூர்மை, கொடிப்படை, சீலை, சுக்கிரீ வன் மனைவி, நா, நாரோடல், மழை, வலி, வழி, விண்மீன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாரை¹ (tārai) — noun
  1. < tārā
  2. Apple of the eye; கண்மணி. (பிங்.) இருதாரை நெடுந்தடங்கண் (பாரத. அருச்சுனன்றவ. 38)
  3. Eye; கண். (திவா.) தாரை நெருப்புக (கம்பரா. சடாயுவுயிர். 103)
  4. Tārā, wife of Jupiter, one of pañca-kaṉṉiyar, q. v.; பஞ்சகன்னியருள் ஒருத்தியான வியாழன் மனைவி. இளநிலாநகைத் தாரையை விடுக்கிலன் (காசிக. 15, 17)
  5. Tārā, wife of Vāli; வாலியின் மனைவி. தாரை யென் றமிழ்திற் றோன்றிய வேயிடைத் தோளினான் (கம்பரா. வாலிவதை. 13)
  6. Star; நட்சத்திரம். (பிங்.)
தாரை² (tārai) — noun
  1. < dhārā
  2. Row, range, line, series; வரிசை
  3. Stripe, streak; கோடு
  4. Order, arrangement, regularity; ஒழுங்கு. நெறித்தாரை செல்லாத நிருதர் (கம்பரா. சூர்ப். 137)
  5. Way, path; வழி. (திவா.) வீரர்போகத் தாரை பெற் றிலர் (உத்தரரா. வரையெ. 17)
  6. Foot track; அடிச்சுவடு. (பிங்.)
  7. Running in a straight line; நேரே ஓடுகை. (பிங்.)
  8. Pace of a horse; குதிரைக்கதி. ஐந்துதாரையினுந் தூண்டி (திருவாலவா. 39, 35)
  9. Downpour of rain; பெருமழை. (பிங்.)
  10. Stream, as of water; நீரொழுக்கு. நெடுந்தாரை கண்பனிப்ப (திருவாச. 7, 15)
  11. Region adjoining anus of bulls and cows; மாட்டின் மலத் துவாரப் பக்கம்
  12. Speed; விரைவு. (திவா.)
  13. Tongue; நா. (சூடா.)
  14. Blade of a weapon; ஆயுதமடல். தாரைகொள் முக்கவைச் சுடர் வேல் (கல்லா. 86, 34)
  15. Sharpness; கூர்மை. (பிங்.)
  16. Discus weapon; சக்கராயுதம்
  17. A quality of the diamond; வயிரக்குணங்களி லொன்று. (சிலப். 14, 180, உரை.)
  18. Threadbareness; ஆடையின் விலக்கிழை. Loc
தாரை³ (tārai) — noun
  1. < tāra
  2. Long brass trumpet; நீண்ட ஊதுங்குழல். தாரை போரெனப் பொங்கின (கம்பரா. கடிமண. 41)
  3. Long reed instrument; ஒருவகைச் சின்னம். (W.)
  4. Water-squirt; நீர்வீசுங் கருவி. தாழ்புனற் றாரையும் (பெருங். உஞ்சைக். 38, 105)