தார்
பெயர்ச்சொல் கழுத்தில் அணியும் மாலை பூ மாலை, மலர் மாலை
tar garland, wreath flower, blossom
Tamil Wiktionary
தார்
- கழுத்தில் அணியும் மாலை
- பூ மாலை
- மலர் மாலை
- தூசிப்படை
- முன்னணிப் படை
- போரில் முன்னேசென்று தாக்கும் படைப்பிரிவினர்.
Winslow (1862)
தார் (tār) — noun
- Wreath, chain, garland, chaplet, மலை
- Flower, blossom, பூ
- Flower- bud, பூவரும்பு
- A string of bells for a horse, &c., கிண்கிணிமாலை
- Van of an army bearing the flag, கொடிப்படை
- Rank and file of an army, படைவகுப்பு. (சது.)
- Weaver's quill, bobbin, or spool, as தாறு
- Army, troops, a regiment, சேனை
தார் (tār)
- (Arab.) An affix implying a substantial person–as சமைதார், ஜமீன்தார், &c
- (Eng.) Tar, pitch, as டார்
Fabricius (1972)
தார் — noun
- a wreath, a garland, a chain, மாலை
- weaver's quill, bobbin or spool, தாறு
- an army, சேனை
- a flower, a blossom, பூ
- the van of an army
- rank and file of an army
- a string of bells for a horse etc. கிண்கிணிமாலை
- the mane of a lion, சிங்கத்தின்பிடரிமயிர்
- (Ar.) an affix implying a substantial person as in ஜமீன்தார்
- (Eng.) tar, pitch, கீல்
Tamil Moli Akarathi (1928)
தார் (tār)
- கிண்கிணிமாலை, கொடிப்படை, தாறு, படை, படைவகுப்பு, பூ, பூவ ரும்பு, மாலை
தார் (tār)
- கிண்கிணிமாலை, கொடிப்படை, படை, பூ, பூவரும்பு, மாலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தார்¹ (tār) — noun
- cf. dhṛ
- Wreath, garland, chaplet; மாலை. (பிங்.)
- Flower, blossom; பூ. (பிங்.)
- Flower-bud; பூவரும்பு. கடைதிறக்குந் தார்கண்ட வண்டும் (வெங்கைக்கோ. 65)
- Cluster of flowers; பூங்கொத்து. தாரார் கரந்தை மலைந்து (பு. வெ. 2, 1)
- String of bells for a horse; கிண் கிணி மாலை. பாய்மா வரும் பொற்றா ரரவத்தாலே (சீவக. 1819)
- Chain; சங்கிலி. (சங். அக.)
- Neck-stripes of parrots; கிளியின் கழுத்துவரை. செந்தார்ப் பசுங்கிளியார் (சீவக. 1036)
- Van of an army; கொடிப்படை. தாரொடு பொலிந்த . . . மூத்த புரிசை (மலைபடு. 227)
- Rank and file of an army, troops; சேனை. (சூடா.) தாரொடுங்கல் செல்லா (கம்பரா. மந்தரை. 13)
- Orderliness; ஒழுங்கு. தாரருந் தகைப்பின் (பதிற்றுப். 64, 7)
- cf. தாறு¹. See தார்க்குச்சு¹. (அக. நி.)
- [T. dāramu.] Cord; கயிறு. அருளெனு நலத்தார் பூட்டி (பதினொ. பட்டணத். கோயினா. 16)
- Mane; பிடர் மயிர். தாரணியெருத்தின் அரிமான் (பதிற்றுப். 12, 4)
- A kind of drum; தோற்கருவிவகை. பம்பைதார் முரசம் (கம்பரா. பிரமாத். 5)
- Land inside a tank, used for dry cultivation; ஏரி உள் வாயிலுள்ள புன்செய். எனக்கு அந்தத் தாரைக் காட்டி னான்
- Trick, tactical move; உபாயம். ஒரு கால் வருதார்தாங்கி (புறநா. 80)
தார்² (tār) — part
- dār < dhārin. A termination indicating owner; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல். ஜாகீர்தார், இனாந்தார்.
தார்³ (tār) — noun
- tār. Liquid or wood tar, pitch, Pix liquido; கீலெண்ணெய். Loc.