தை

தமிழ் நாட்காட்டி ஆண்டில் பத்தாவது மாதம் (பெரும்பாலும், ஜனவரி 14 முதல் பிப்பிரவரி 12 வரையான காலம்). தையல் இடு. இந்த தையில் திருமணம் நடந்து விடும்.

to sew, stitch, seam to make or create by stitching to pierce, penetrate, prick, as a thorn, an arrow

Tamil Wiktionary

தை — பெயர்ச்சொல் (Noun)
  1. தமிழ் நாட்காட்டி ஆண்டில் பத்தாவது மாதம் (பெரும்பாலும்
  2. ஜனவரி 14 முதல் பிப்பிரவரி 12 வரையான காலம்).
  3. தையல் இடு.
  4. இந்த தையில் திருமணம் நடந்து விடும்.
  5. பூக்கள் மலரும் மாதம்
  6. தை பிறந்தால் வழி பிறக்கும்.
  7. தை - தழுவும்
  8. (தைவருளிய வளியும்) - தழுவி வரும் காற்றும்

Winslow (1862)

தை (tai)
  1. A syllabic letter, compounded of த் and ஐ.
தை (tai) — noun
  1. January, the month, ஓர்மாதம்
  2. A sound in beating time, தாளக்குறிப்பினொன்று. (c.)
  3. The eighth lunar asterism, as பூசம்
  4. Capricorn of the Zodiac, மகரவிராசி
  5. (R.) Juice and root of தைவிளை, which see. தையீனாப்புல்லுமில்லைமாசியீனாமரமுமில்லை...... There is no graminious plant, but ears in January, and no tree that does not blossom in february
  • தைக்குரக்கன் — Watching millet sown in January.
  • தைச்சங்கிரமம் — The entrance of the sun into Capricorn. See சங்கிரமம், சங்கிராந்தி.
  • தைச்செவ்வாய் — A Tuesday in January, auspicious.
  • தைப்பிறப்பு — [com. தைமாதப்பிறப்பு.] New year's day, astronomically; observed by boiling rice, to propitiate the favor of the sun, supposed to commence, at that time, his course northward.
  • தைப்பிறை — The new moon as seen in January, observed to ascertain whether the year will be fruitful.
  • தைப்பூசம் — The day when the moon is in the பூசம், in January, being an auspicious time for eating the first rice, bathing, and taking oblations to the temple.
தை (tai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To adorn, to beautify, அலங்கரிக்க. (சது.)
  • தைதல் — Embellishment.

Fabricius (1972)

தை — noun
  1. January, தை மாதம்
  2. a sound in beating time, தாளக்குறிப்பு
  3. the 8th lunar asterism, பூரம்
  4. Capricorn of the Zodiac, மகரராசி
  • தைச்சங்கிரமம் — the entrance of the sun into Capricorn.
  • தைப்பிறப்பு — new year's day astronomically, when rice boiled with milk and sugar or jaggery is offered to the Sun who at that time commences his course northward.
  • தைப்பிறை — the new moon as seen in January, observed to ascertain whether the year will be fruitful.
  • தைப்பொங்கல்–தைப்பிறப்பு — the festival of boiling rice in cow's milk, see .
  • தையறம் — the drying up of the rivers in January.
தை — v. t.
  1. v. t. adorn, beautify, அலங்கரி.
  • தைதல் — embellishment.
தை — v. t.
  1. v. t. sew, stitch, துன்னு
  2. nail, fasten with nails pin, கடாவு
  3. net with a netting needle, வலை பின்னு
  4. (with தொகை) close an account, தொகைகதை; v. i. run in as a thorn, pierce as an arrow, குத்து
  5. strike, affect, pierce the mind, உறுத்து
  • என்காலிலே முள் தைத்தது — I ran a thorn into my foot.
  • அம்பு தைத்தவன் — a person wounded with an arrow.
  • அந்தச்சொல் அவன் மனதிலே தைத்து — that word made a deep impression on his mind.
  • தைப்பான் — a needle; 2. one who sews.
  • தைப்பு–தைத்தல் — sewing, fastening, nailing; 2. piercing.
  • தைப்பை — a garment made by sewing.

Tamil Moli Akarathi (1928)

தை (tai)
  1. ஓரெழுத்து, ஒருமாதம், தாளக் குறிப்பினொன்று, தைக்கத்தக்கவை, தையென்னேவல், பூசநாள், மகர ராசி
தை (tai)
  1. ஓர்வகையெழுத்து, ஓர்மாதம், தை யென்னேவல், பூசநாள், மகரராசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தை¹ (tai)
  1. The compound of த் and ஐ.
தை³ (tai) — noun
  1. < தை-
  2. Decoration, embellishment; அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு. Mss.)
  3. Sewing; தையல். (தைலவ. தைல.)
தை⁴ (tai) — noun
  1. (Mus.) Onom. expr. of beating time; ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தை
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (த்--ஐ)
  2. ஒரு மாதம்
  3. பூசநாள்
  4. மகரராசி
  5. நாய்க்கடுகு செடி
  6. தையல்
  7. தாளக் குறிப்பினுள் ஒன்று
  8. அலங்காரம்
  9. மரக்கன்று