தொடர்ச்சி

ஒன்றன் பின் ஒன்றாக வரும் தன்மை, இடைவெளி இல்லாதிருத்தல் continuity

following, continuance, continuity association, connection, touch relationship

Tamil Wiktionary

தொடர்ச்சி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்றன் பின் ஒன்றாக வரும் தன்மை, இடைவெளி இல்லாதிருத்தல்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

தொடர்ச்சி (toṭarcci)
  1. உரிமை ஒழங்கு, தொடர்பு, பற்றுதல், பூத்திரள், முயற்சி, வழக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொடர்ச்சி (toṭarcci) — noun
  1. < id
  2. Pursuit, following, continuance; தொடர்கை
  3. Association, connection, touch; சம்பந்தம். முந்தை யறிவின் றொடர்ச்சியினால் (பெரியபு. சண்டேசு. 13)
  4. Relationship; உறவுமுறை
  5. Hereditary succession, lineal descent; பரம் பரைத் தொடர்பு
  6. Friendship, intimacy; நட்பு. தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் (திரிகடு. 1)
  7. Series, train, range, row, chain; வரிசை. கருந் தேன்றொடர்ச்சியும் (கல்லா. 26, 30)
  8. Cluster or bunch of flowers; பூங்கொத்து. (பிங்.)
  9. (Buddh.) Chain of causes and effects; காரண காரிய சம்பந்தம். தொடர்ச்சி . . . வித்துமுளைதா ளென்றிந் நிகழ்ச்சியிலவற்றை நெல்லென வழங்குதல் (மணி. 30, 200)
  10. Claim in a law-suit; வழக்குத் தொடர்ச்சி. (யாழ். அக.)
  11. Demoniacal possession; பேய்பிடிக்கை. (W.)
  12. Illicit connection, concubinage; தொடுசு. Colloq
  13. Effort; முயற்சி. (யாழ். அக.)
தொடர்ச்சி (toṭarcci) — noun
  1. Denseness, closeness; செறிவு. (திவ். திருச்சந். 105, வ்யா. பக். 308.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொடர்ச்சி
  1. தொடர்கை
  2. உறவுமுறை
  3. பரம் பரைத் தொடர்பு
  4. நட்பு
  5. வழக்குத் தொடர்ச்சி
  6. , பூங்கொத்து
  7. முயற்சி
  8. வரிசை
  9. காரணகாரியத் தொடர்பு
  10. தொடுசு
  11. செறிவு