தொடை

இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். துடைத்தல் wipe, wipe off, dust

thigh garland arrow

Tamil Wiktionary

தொடை — வினைச்சொல் (Verb)
  1. இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  2. துடைத்தல்

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

தொடை (toṭai) — noun
  1. The thigh, in which sense, for butcher's meat, are, பெருந்தொடை, the upper part of the thigh; பின்னந்தொடை, a hind-quarter; முன்னந்தொடை, a fore-quarter of a sheep, &c
  2. Flower-garland. பூமாலை
  3. Bow-string, நாண்
  4. Arrow, அம்பு
  5. Surrounding wall, bulwark, fortification, மதிற்சுற்று
  6. Block projecting from a wall to support a beam, சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம்
  7. A bunch of flowers, பூங்கொத்து
  8. Verse, poetry, பாட்டு
  9. A series, train, connexion, succession, tissue, composition, commonly poetic, தொடர்ச்சி
  10. Rhyme in poetry, செய்யுளுறுப்பினொன்று, [ex தொடு. (v.)–There are five classes of rhyme, each containing eight varieties, and three single ones making forty-three in all. The five classes are:
  11. மோனை, மோனைத்தொடை, the rhyming of the initial letter of the line or foot through the stanza. The varieties of this class are:
  12. அடிமோனை, முதன்மோனை, rhyming of the initial in the foot of each line
  13. இணைமோனை, of the first two feet in each line
  14. பொழிப்புமோனை, of every other foot
  15. ஓரூஉமோனை, of the first and fourth foot
  16. கூழைமோனை, of all the feet in the line but the last
  17. மேற்கதுவாய்மோனை, in every foot bu the second
  18. கீழ்க்கதுவாய்மோனை, of all the feet but the penultimate
  19. முற்றுமோனை, in every foot. II. இயைபு, இயைபுத்தொடை, the rhyming of the last feet or letters in the lines. The varieties are:
  20. அடிஇயைபு, முதலியைபு, rhyming of the last letter of the first foot in each line
  21. இணையியைபு, of the last letter of the first two feet
  22. பொழிப்பியைபு, of the last letter of every other foot
  23. ஓரூஉவியைபு, of the last letter in the first and fourth
  24. கூழையியைபு, of the last letter in each foot except the last
  25. மேற்கதுவாயியைபு, in the last letter of every foot but the second
  26. கிழ்க்கதுவாயியைபு, of the last letter in every foot but the penultimate
  27. முற்றிழைபு, of the last letter in all the feet. III. ஏதுகை, ஏதுகைத்தொடை, rhyming of the second letter of every line in the stanza, comprising
  28. அடியெதுகை, முதலெதுகை, rhyming of the second letter of the first foot in each line
  29. இணையெதுகை, in the second letter of the two feet
  30. பொழிப்பெதுகை. that of every other foot
  31. ஓரூஉவேதுகை, that of the first fourth
  32. கூழையெதுகை, that of all but the last
  33. மேற்கதுவாயெதுகை, that of all but the second
  34. கீழ்க்கதுவாயெதுகை, that of all but the pen- ultimate
  35. முற்றெதுகை, in the second letter of all the feet. IV. முரண், முரண்டொடை, a kind of poetry consisting of words taken in contrast, or by antithesis, as இருள்பரந்தன்னமாநீர்மருங்கின், நிலவுகுவிந்தன்னவெண்மணலொருசிறை, by the side of the waters, dark as the wide spread nocturnal gloom, the white sand appeared, as if the moon-light had formed itself into heaps. Of this there are eight varieties, as
  36. அடிமுரண்,முதன் முரண், contrast in the first foot of the lines, with one another
  37. இணைமுரண், that in the first two feet of the lines
  38. பொழிப்புமுரண், that in every other foot of the lines
  39. ஓரூஉமுரண், that in the first and fourth
  40. கூழைமுரண், contrast in all but the last
  41. மேற்கதுவாய்முரண், in all but the second
  42. கீழ்க்கதுவாய்முரண், in all but the penultimate
  43. முற்றுமுரண், in all the feet. V. அளபெடைத்தொடை, rhyme formed by அளபெடை, or lengthening a letter for a verse, which are of eight varieties, as
  44. அடியளபெடை, முதலளபெடை, forming rhyme by அளபெடை, in the first of each line
  45. இணையளபெடை, in the first two feet
  46. பொழிப்பளபெடை in every other foot
  47. ஓரூஉவளபெடை, in the first and fourth
  48. கூழையளபெடை, in all but the last
  49. மேற்கதுவாயளபெடை, in all but the second
  50. கீழ்க்கதுவாயளபெடை, in all but the penultimate
  51. முற்றளபெடை, in all the feet. VI. அந்தாதி, அந்தாதித்தொடை, rhyme by the occurrence of the last syllable, word or words in the stanza as the first of the sacceeding. VII. இரட்டைத்தொடை, by the repetition of the same in every foot through the line. VIII. செந்தொடை, poetry of numbers without rhyme, a kind of blank verse. For further particulars, see these in their respective places
  • தொடைமுறியஅடிக்க — To break one's thigh in beating him.
  • தொடைமேல்தொடைபோட — To sit with one thigh on the other (deemed impolite.)
  • தொடைதட்டிவெள்ளாழர் — Barbers.
  • தொடையகராதி — A division of சதுரகராதி, which see.
  • தொடையிலேதட்ட — To strike the thigh in token of bravery, defiance, admiration, surprize, &c.
  • தொடையைநிமிண்ட — To pinch the thigh as a punishment of a school boy, &c.

Fabricius (1972)

தொடை — noun
  1. the thigh, குறங்கு
  2. a flower-garland, பூமாலை
  3. a bow- string, வில்நாண்
  4. an arrow, அம்பு
  5. rhyme in poetry, செய்யுளுறுப்பி லொன்று
  6. a surrounding wall, a bullwark, a fortification, மதிற்சுற்று
  7. verse, poetry, பாட்டு
  8. block projecting from a wall to support a beam, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம்
  9. a bunch of flowers
  • தொடைதட்டி வெள்ளாழர்–வெள்ளாளர் — barbers.
  • தொடையிலே தட்ட–தட்ட — to strike the thigh in token of bravery, defiance, admiration, surprise etc.
  • தொடையை நிமிண்ட — to pinch the thigh.
  • தொடைவாழை–வாளை — a tumour on the thigh near the groin; 2. a shrub whose leaves are used to cure the tumour.
  • தொடைவாழை–வாளை–புறப்பட்டுக் கிடக்க — to lie sick of the thigh tumour.
  • தொடை விகற்பம் — the different varieties of rhyme.

Tamil Moli Akarathi (1928)

தொடை (toṭai)
  1. அம்பு, உத்திரந்தாங்குங்கட் டை, செய்யுட்டொடை அது பல வடிகளிலேனும் பல சீர்களிலேனு மெழுத்துக்களிலொன்றி வருவது, துடை, தொடர்ச்சி, நாணி, பூங்கொ த்து, பூமாலை, மதில்,மாலை,வீணை முதலியவற்றி னரம்பு
தொடை (toṭai)
  1. அம்பு, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், செய்யுளுறுப்பிலொன்று, தொடை, நாணி, பூமாலை, மதிற் சுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொடை² (toṭai) — noun
  1. < தொடு²-
  2. Discharging, shooting, one of pañca-kiruttiyam, q.v.; வீரரின் பஞ்சகிருத்தியத்துள் ஒன்றாகிய அம்பெய் கை. செந்தொடை பிழையா வன்க ணாடவர் (புறநா. 3). (சீவக. 1676, உரை.)
  3. Braiding, weaving; பின்னுகை. தொடையுறு வற்கலை யாடை (கம்பரா. முதற்போ. 109)
  4. Unbroken succession or continuity; இடையறாமை. தொடையிழி யிறாலின் றேனும் (கம்பரா. நாட்டுப். 9)
  5. Fastening, tying; கட்டுகை. தொடைமாண்ட கண்ணியன் (கலித். 37)
  6. Kicking, stroke; எற்று. ஒருதொடையான் வெல் வது கோழி (நான்மணி. 54)
  7. Series, train, succession; தொடர்ச்சி. தாபதர் தொடைமறை முழக்கும் (கல்லா. 39, 10)
  8. String; வடம். முத்துத்தொடை (பரிபா. 6, 16)
  9. Joints of the body; சந்து. வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் (புறநா. 78)
  10. Cluster, bunch; கொத்து. தொடை மலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708)
  11. Flower-garland; பூமாலை. (பிங்.)
  12. Compactness of an unblown flower; மலர்முறுக்கு. தொடையவிழ் தண்குவளை (பு. வெ. பொது. 1)
  13. Lute string; யாழ் நரம்பு
  14. Bowstring; வில்லின் நாண். (பிங்.) தொடையை நிரம்ப வாங்கிவிடாத முன்பே (சீவக. 2320)
  15. Arrow; அம்பு. (சூடா.)
  16. Stairs, step; படிக்கட்டு. குறுந்தொடை நெடும்படிக் கால் (பட்டினப். 142)
  17. Question; criticism; ஆட்சேபணை. தொடைவிடை யூழாத்தொடைவிடை துன்னி (பு. வெ. 8, 19)
  18. See தொடர்மொழி
  19. (அக. நி.)
  20. Bunch of fruits; தாறு. பூமாண்ட தீந்தேன் றொடைகீறி (சீவக. 31)
  21. Surrounding wall, bulwark, fortification; மதிற்சுற்று. (திவா.)
  22. Block projecting from a wall to support a beam; சுவர்ப்புறத்து வைத்த உத்திரந் தாங்கு கட்டை. (W.)
  23. Written record of one's victory in a contest. See சயபத்திரம். தொடைவேட் டழிபட லாற்ற லறிமுறை யேன்று (பு. வெ. 8, 19)
  24. Stanza, verse; பாட்டு
  25. (Pros.) Mode of versification, of five kinds, viz., mōṉai-t-toṭai, etukai-t-toṭai, muraṇ-ṭoṭai, tyaipu-t-toṭai, aḷapeṭai-t-toṭai; மோனைத்தொடை, எதுகைத்தொடை, முரண்டொடை, இயைபுத்தொடை, அளபெடைத்தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும்வகை. (இலக். வி. 723.)
  26. See தொடைக்கயிறு. எழுநுகத்தோ டிணைப்பகடு தொடுத்த தொடை (ஏரெழு. 10)
  27. Law; சட்டம். தொன் மனுநூற் றொடைமனுவாற் றொடைப்புண்டது (பெரியபு. மனுநீதி. 37)
தொடை³ (toṭai) — noun
  1. (W. G.)
தொடை⁴ (toṭai) — noun
  1. Thigh; துடை யென்னும் உறுப்பு.

IndoWordNet

தொடை — noun
  1. மனிதரில் இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, விலங்குகளில் பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி.

வெளிப்பாகம் புறப்பாகம்