நாண்

வெட்கம் மகளிர்க்கு உரிய நாணம்,கூச்சம் வில்லின் கயிறு

string, cord bow string

Tamil Wiktionary

நாண் — பெயர்ச்சொல் (Noun)
  1. வெட்கம்
  2. மகளிர்க்கு உரிய நாணம்,கூச்சம்
  3. கயிறு
  4. வில்லின் கயிறு
  5. வட்டத்தின் பரிதியில் இருக்கும் எந்த இரு புள்ளியையும் இணைக்கும் நேர்கோடு
  6. மாங்கலியம் கோத்த சரடு
  7. பழிக்கு அஞ்சுதல்

[object Object]

Winslow (1862)

நாண் (nāṇ) — noun
  1. [also ஞாண்.] String, கயிறு
  2. A how-string, வின்னாரி
  • நாணிறக்க — To slacken the bow.
  • நாணேற்ற–நாணேறிட–நாண்பூட்ட — To bend the bow.
நாண் (nāṇ) — noun
  1. Modesty, bashfulness, shame
  2. One of the four female qualities as நாணம்
  • நாணுடைமை — Modest decorum, (குறள்.)

Fabricius (1972)

நாண் — noun
  1. see ஞாண், a string, a bow- string.
  • நாணிறக்க — to slacken the bow.
  • நாணேற்ற–நாண்பூட்ட — to bend the bow.
நாண் — noun
  1. modesty, bashfulness, நாணம் (one of the four female qualities அச்சம், நாண், மடமை, & பயிர்ப்பு).
  • நாணுடைமை — modest decorum.

Tamil Moli Akarathi (1928)

நாண் (nāṇ)
  1. கயிறு, நாணென்னேவல், வின் னாண், வெட்கம்
நாண் (nāṇ)
  1. பூரி, ஆவம், பூட்டு, தொடை, வட ம், நாரி-நரம்பு, குணம்
நாண் (nāṇ)
  1. கயிறு, நாணென்னேவல், வெட்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாண்¹ (nāṇ) — noun
  1. Sense of shame; வெட்கம். நாணாக நாணுத்தரும் (குறள், 902)
  2. Bashfulness, modesty; மகளிர்க் குரிய கூச்சம். அச்சமு நாணும் (தொல். பொ. 99)
நாண்² (nāṇ) — noun
  1. cf. ஞாண். [K. nēṇ.]
  2. String; கயிறு. (சூடா.)
  3. Bowstring; வில்லின் நாண். வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் (கலித். 15, 2)
  4. Woman's necklet containing the marriage badge; மாங்கலியங்கோத்த சரடு. உன் கழுத்தின் னாணுன் மகற்குக் காப்பின் னாணா மென் றான் (கம்பரா. நகர்நீங். 49)
  5. Waist-string. See அரைஞாண். நாணும் அரைத்தொடரும் (திவ். பெரியாழ். 1, 2, 4)

IndoWordNet

நாண் — noun
  1. தந்தூரி வகையில் சமைக்கக்கூடிய ஒரு வகை புளித்த ரொட்டி
நாண் — noun
  1. வில்லை வளைத்துக் காட்டியிருகும் கயிறு அல்லது கயிறு போன்ற பொருள்

சப்பாத்தி கயிறு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாண்
  1. வெட்கம்
  2. மகளிர்க்குரிய கூச்சம்
  3. வில் நாண்
  4. கயிறு
  5. மாங்கலியங் கோத்த சரடு
  6. காண்க: அரைஞா(நா)ண்