நெடுமை

length

Tamil Wiktionary

நெடுமை
  1. உயரம்
  2. நீண்ட

Winslow (1862)

நெடுமை (neṭumai) — noun
  1. Length, extension, நீட்சி
  2. Tallness, height of a person, tree, &c., உயரம்
  3. Continuation, protraction, நீண்டது
  4. Immoderateness, excessiveness, அமிதம்
  5. (சது.) Female hair, பெண்மயிர்.–Note. In derivatives from this word, the final letter or whole syllable may be dropped or changed by rule, and the middle vowel changed–Thus, as adjectives, from நெடுமை, are நெடு, நெடிய, நெட்ட, நெட்டு, and in combination, நெடுங்காலம், நெடியார், நெட்டுயிர், &c
  • நெடிது — Long, a long thing.
  • நெடியவட்டம் — Large shield, பெருங்கேடகம்.
  • நெடியவன் — A tall man. 2. Vishnu, as the tall one, Trivicrama, விஷ்ணு.
  • நெடியன்–நெடியான் — [plu. நெடியர், &c.] A tall man, நெடியவன். நெடியாரைக்குறியாரைஆற்றிலேஅறியலாம்..... Who are the tall and who the short will appear at the river; i. e. the thing will be known on examination.
  • நெடியோன் — As நெடியவன்.

Fabricius (1972)

நெடுமை — noun
  1. length, extension, நீட்சி
  2. tallness, உயரம்
  3. female hair
  4. excessiveness, அமிதம்
  5. continuation, protraction, நீண்டது. For the adjectives from நெடுமை see நெடு

Tamil Moli Akarathi (1928)

நெடுமை (neṭumai)
  1. அமிர்தம், உயரம், நீளம், பெண்மயிர்
நெடுமை (neṭumai)
  1. நீளம், பெண்மயிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெடுமை (neṭumai) — noun
  1. Length, extension; நீளம். குறுமையு நெடுமை யும் (தொல். எழுத். 50)
  2. Tallness, height, as of a person or tree; உயரம். நெடுமையா லுலகேழு மளந்தாய் (திவ். பெரியாழ். 5, 1, 4)
  3. Continuation; protraction; காலம் முதலியவற்றின் நீட்சி. Loc
  4. Greatness; பெருமை. (சீவக. 1951, உரை.)
  5. Boundlessness, excessiveness; அளவின்மை. (குறள், 17)
  6. Depth; ஆழம். (குறள், 495.)
  7. Cruelty; கொடுமை. (கம்பரா. சம்பாதி. 5.)
  8. Woman's hair; பெண்டிர் தலைமயிர். (திவா.)
நெடுமை (neṭumai) — noun
  1. Long vowel; நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர் (பேரகத். 15).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெடுமை
  1. நீளம், உயரம், காலம் முதலிய வற்றின் நீட்சி
  2. பெருமை
  3. அளவின்மை
  4. ஆழம்
  5. கொடுமை
  6. பெண்டிர் தலைமயிர்
  7. நெட்டெழுத்து