நெற்றி

மனித உடலில், கண்களுக்கு மேலுள்ளப் பகுதி ஆகும். forehead, brow - frente -

forehead front top, summit

Tamil Wiktionary

நெற்றி
  1. மனித உடலில், கண்களுக்கு மேலுள்ளப் பகுதி ஆகும்.

Winslow (1862)

நெற்றி (neṟṟi) — noun
  1. Forehead, front, brow, நுதல்; vulgarly, நெத்தி
  2. End or extremity of a board, a timber, &c., தண்டிகையின்தலைப்பு
  3. The upright, front, or prominent part of a building, a fort, &c.; a gable, வீட்டின்முகடு, (c.)
  4. Front of an army, முன்னணி
  5. Brow of a hill, மலையுச்சி
  6. Upper part of the stem of a tree, where it branches off, மரத்தினுளி
  7. Rank or file of an army, படைவகுப்பு
  • நெற்றிக்கண்–நுதற்கண் — Frontal eye, as of Siva.
  • நெற்றிக்கண்ணன் — Siva, சிவன்.
  • நெற்றிக்குநேரே — . Over against one, fronting one.
  • நெற்றிக்கை — As நெற்றிமுட்டு, 2.
  • நெற்றிச்சுட்டி — An ornament for the forehead of a female or a child. 2. As சுட்டி, which see.
  • நெற்றிச்சுழி — A kind of curve on the forehead.

Fabricius (1972)

நெற்றி — noun
  1. forehead, front, brow, நுதல்
  2. gable, வீட்டின் முகடு
  3. front of an army; rank or file of an army
  • நெற்றிக்கண்ணன் — Siva.
  • நெற்றிச்சுட்டி — a jewel worn by women on the forehead.
  • நெற்றி முட்டு — a short, direct way, short-cut; 2. sudden meeting at a corner; 3. a slanting timber in a bangalow roof.
  • நெற்றியைச் சுளிக்க–நெறிக்க — to wrinkle the forehead in displeasure, to frown.
  • நெற்றிவரை — the lines or wrinkles on the forehead.
  • ஏறுநெற்றி — a high forehead ( குறுநெற்றி, narrow, forehead).

Tamil Moli Akarathi (1928)

நெற்றி (neṟṟi)
  1. உச்சி, நுதல், படைவகுப்பு
நெற்றி (neṟṟi)
  1. நுதல், படைவகுப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெற்றி¹ (neṟṟi) — noun
  1. Forehead; புருவங்கட்கு மேல் உள்ள முகத்தின்பகுதி. கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலி மதுரை (திருவாச. 8, 8)
  2. Front; முன்பகுதி. நிடதத்தினெற்றி (கம்பரா. மருத்து. 17)
  3. Top, summit; உச்சி. கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடை (சீவக. 31)
  4. Sky; ஆகாயம். நெறிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப். 524)
  5. Front side of the storey of a building, facade; கட்டடத்தின் மேனிலைமுகப்பு. நிரைமணி மாட நெற்றிச் சாளரந் தோறும் (கம்பரா. மிதிலை. 14)
  6. End or extremity of a board, timber, etc.; தண்டிகை முதலியவற்றின் தலைப்பு. (W.)
  7. The upper part of the trunk of a tree where it branches off; மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம். (W.)
  8. Van of an army; முன்படை. நெற்றியிலரக்கர் பதிசெல்ல (கம்பரா. ஒற்றுக்கேள்வி. 6)
நெற்றி² (neṟṟi) — noun
  1. prob. நேர்த்தி. Effort; முயற்சி. நெற்றி அல்பமாய்ப் பலம் கனக்கப்பெறு மதிறே (ஈடு, 9, 1, 4).
நெற்றி (neṟṟi) — noun
  1. Middle; நடு. காலைநெற்றியி லகிலமுஞ்சுடு கனலிகுறைபட (தக்கயாகப். 334).

IndoWordNet

நெற்றி — noun
  1. தலை முடிக்கு கீழும் புருவத்திற்கு மேலும் உள்ள பகுதி.

நுதல் உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு யானை நெற்றி யானையின் நுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெற்றி
  1. கண்புருவங்களுக்கு மேலுள்ள பகுதி
  2. முன்படை
  3. முன்பகுதி
  4. உச்சி
  5. கட்டடத்தின் மேனிலை முகப்பு
  6. வானம்
  7. தண்டிகையின் தலைப்பு
  8. மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம்
  9. நடு
  10. முயற்சி