பணிவிடை

ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும் உதவிகள் செய்தல் ஒருவர் கோயில், தொண்டு, அற நிறுவனங்களில் இசைவுடன் செய்யும் பணிகள் (வேலைகள்). பணிவிடை செய்

workplace

Tamil Wiktionary

பணிவிடை — வினைச்சொல் (Verb)
  1. ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும் உதவிகள் செய்தல்
  2. ஒருவர் கோயில், தொண்டு, அற நிறுவனங்களில் இசைவுடன் செய்யும் பணிகள் (வேலைகள்).
  3. பணிவிடை செய்

Winslow (1862)

பணிவிடை (paṇiviṭai) — noun
  1. Service, employment of a servant, dependent, &c., குற்றேவல்
  2. Work, business, occupation, office, work of an artist, வேலை
  3. Commission, errand, orders, command, கட்டளை; [ex பணி, v.] –Note. This word is often used in compliment, as ஏன்னபணிவிடை, what commands, what service can I render?
  • பணிவிடைக்காரன் — [fem. பணிவிடைக்காரி, pl. பணிவிடைக்காரர்.] A servant, a house servant. 2. An artist, artisan, workman.
  • பணிவிடைகேட்டல் — Doing one's commissions, or errand. 2. Waiting on one as a servant.

Fabricius (1972)

பணிவிடை — noun
  1. see under, பணி v.

Tamil Moli Akarathi (1928)

பணிவிடை (paṇiviṭai)
  1. கட்டளை, குற்றவேல்வேலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பணிவிடை (paṇi-viṭai) — noun
  1. < பணி³ + விடு-
  2. Service; குற்றேவல். பணிவிடை வானவர் புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10)
  3. Temple service; temple construction; திருப்பணி. பொருடனை . . . பணிவிடைக்குரித் தாக்கிய பெருமான் (உபதேசகா. சிறப்புப். 10)
  4. Work, business, occupation, office, work of an artist; தொழில்
  5. Commission, order, command; கட்டளை. இறைவ விப்பணிவிடை தருக (பாரத. வேத். 32)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பணிவிடை
  1. குற்றேவல்
  2. திருப்பணி
  3. வேலை
  4. கட்டளை