பத்தி

வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். வகுப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

devotion (as to God, a guru, a king, etc.), bhakti service, worship moral conduct

Tamil Wiktionary

பத்தி
  1. வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  2. வகுப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  3. செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  4. பாத்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  5. முறைமையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  6. அலங்கார வேலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  7. வீட்டிறப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  8. தூண்களின் இடைவெளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  9. யானையின் நடை வகையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  10. கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  11. வழிபாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  12. ஒழுக்கத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  13. ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறிய படைப் பிரிவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  14. நம்பிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  15. அன்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

Winslow (1862)

பத்தி (patti) — noun
  1. Row, train, column, rank, range, file, colonnade, series, வரிசை–as பந்தி
  2. Class, arrangement in writing or print, &c., நிரை
  3. Mode, method, order, established rule or custom, way; plan, manner, முறைமை
  4. Extension of a verandah-roof, வீட்டிறப்பு
  5. Room or space between pillars, தூணினிடைவெளி. (c.)
  6. (Old. Dic.) Garden beds in rows, as பாத்தி. பத்திபத்தியாயிருத்தல். Being in columns, as writing, &c. பத்திபத்தியாயெழுதல். Writing in separate columns or portions, instead of writing all across the ola, page, &c. பத்திபத்தியாய்வைத்தல். Placing or ranging in rows, columns, &c. பத்தியிறக்குதல், Making a sloping verandah-roof
  • பத்திபாய — To stream out, as pencils of rays, கதிர்வீச. (p.)
  • பத்தியுலாவல் — Walking with others, in rows. (R.)

Fabricius (1972)

பத்தி — noun
  1. series, row, வரிசை
  2. column in writing. நிரை
  3. mode, method, order, established rule or custom, way, plan, manner, முறைமை
  4. room or space between pillars
  5. garden beds in rows
  • பத்தி பத்தியாய் எழுத — to make several columns in writing.
பத்தி — noun
  1. பக்தி, s. devotedness, fidelity, பற்றுதல்
  2. piety, godliness, faith, விசுவாசம்
  3. service, worship, ஆரா தனை
  4. a division of an army composed of one chariot, one elephant, three horse and five foot soldiers, பதாதி
  • பத்தன்–பக்தன் — ( பக்தர்) a devout person, a devotee, தொண்டன்.
  • அவன் எனக்குப் பத்தன் — he is my trusted friend, he trusts in me.
  • பத்தாசை — gratitude and love.
  • பத்திமான் — a pious godly man.
  • பத்திவிசுவாசம் — piety and faith.
  • பத்திவைராக்கியம் — religious enthusiasm, piety and zeal.

Tamil Moli Akarathi (1928)

பத்தி (patti)
  1. அடைப்பு, அன்பு, ஒழுக்கம், ஒழு ங்கு, தூணினிடை, வெளி, தொண் டு, நடை, நம்பிக்கை, நிரை, பங்கு, பதாதி, பாத்தி, முறைமை, வரிசை வழிபாடு, விசுவாசம், வீட்டிறப்பு
பத்தி (patti)
  1. அன்பு, ஆராதனை, ஒழுக்கம், ஒ ழுங்கு, முறைமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பத்தி¹ (patti) — noun
  1. < paṅkti
  2. Row, train, column, rank, range, file, colonnade, series; வரிசை. பத்தியிற் குயிற்றிய . . . சித்திரக்கிம்புரி (சீவக. 83)
  3. Class; arrangement; division; வகுப்பு. (W.)
  4. Columns in writing or print; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி. பத்திரிகை மூன்று பத்திகொண்டது. (W.)
  5. Garden beds in rows; பாத்தி. (W.)
  6. Mode, method, order, way, plan, manner; established rule or custom; முறைமை. (சூடா.)
  7. Fineness in workmanship; அலங்கார வேலைப்பாடு. பத்திப் பல்வினை (பெருங். இலாவாண. 6, 55)
  8. Sloping verandah-roof; வீட்டிறப்பு. வீட்டிற் பத்தியிறக்கி னார்கள். (W.)
  9. Room or space between pillars; தூண்களின் இடைவெளி. (W.)
  10. Gait of an elephant; யானையின் நடைவகை. வினைதகு வட் டமும் வீதியும் பத்தியும் . . . இமைப்பினி னியற்றி னான் (சீவக. 1839)
பத்தி² (patti) — noun
  1. < bhakti
  2. Devotion to God, guru, king, etc.; கடவுள் முதலியோரிடத்தி லுள்ள பற்று. பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப் பவன் (திருவாச. 2, 119)
  3. Service; worship; வழிபாடு. (சூடா.)
  4. Moral conduct; ஒழுக்கம். (சூடா.)
பத்தி³ (patti) — noun
  1. The smallest division of an army 1 chariot, 1 elephant, 3 horses, 5 soldiers; ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, 5 காலாட்கள் கொண்ட படை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பத்தி
  1. வழிபாடு
  2. ஒழுக்கம்
  3. முறைமை
  4. வரிசை
  5. வகுப்பு
  6. பத்திரிகை முதலியவற்றின் நீளவாட் டுப் பகுதி
  7. அலங்கார வேலைப்பாடு
  8. யானை யின் நடைவகை
  9. வீட்டிறப்பு
  10. தூணின் இடை வெளி
  11. பாத்தி
  12. நம்பிக்கை
  13. பக்தி
  14. படைத் தொகுதி