புகல்

சொல், கூறு புகல் - மற்றவரிடம் ஏதாவதொன்றைக் கூறும்படி அல்லது சொல்லும்படி பணிப்பது/கேட்பது. எப்பொழுதும் மெய்யேப் புகலவேண்டும் பொய்ப் புகலக்கூடாது.

to say, declare, state to desire to learn

Tamil Wiktionary

புகல் — வினைச்சொல் (Verb)
  1. சொல்
  2. கூறு
  3. கருது

[object Object]

Winslow (1862)

புகல் (pukal) — noun
  1. Refuge, asylum, தஞ்சம். (c.)
  2. Body, உடல்
  3. A receptacle for paddy, made of straw and covered with clay, commonly குதிர்
  4. Entrance, ingress, பிரவேசித்தல்
  5. Victory, வெற்றி
  6. Means, an expedient, உபாயம், used in the south; [ex புகு.]
  7. A word, சொல். (சது.)
  • புகலிடம் — Refuge, retreat, asylum, as புகல். 2. Town, village, ஊர். (சது.)
  • புகல்சொல்ல — To give excuses.

Fabricius (1972)

புகல் — v. t.
  1. , புகலு, I. v. t. say, declare, சொல்லு.
  • புகலல்–புகறல் — speaking, saying.
புகல் — noun
  1. refuge, அடைக்கலம்
  2. receptacle for paddy, குதிர்
  3. means, expedient, உபாயம்
  4. pretext, சாக்குப் போக்கு
  5. a word, சொல்
  6. body, உடல்
  7. egress, entrance, பிரவேசித் தல்
  8. victory, வெற்றி
  • புகலிடம்–ஊர் — refuge, asylum; 2. a town, a village, .
  • புகல் சொல்ல — to make an excuse or pretext.

Tamil Moli Akarathi (1928)

புகல் (pukal)
  1. உடல், உபாயம், குதிர், சொல், தஞ்சம், புகலென்னேவல், வெற்றி
புகல் (pukal)
  1. உடல், குதிர், சொல், தஞ்சம், புக லென்னேவல், வியங்கோண்முற்று, வெற்றி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புகல்² (pukal) — noun
  1. < புகல்-
  2. Word; சொல். (பிங்.)
  3. Desire; விருப்பம். வானுறை புகறந்து (பரிபா. 19, 1)
  4. Rejoicing; கொண்டாடுகை. புகலகல் நின்மார்பின் (கலித். 79)
  5. Mode of singing; பாடும் முறை. (பெரியபு. ஆனாய. 26.)
  6. Victory; வெற்றி. புகல்விசும்பில் (பு. வெ. 9, 21). (திவா.)
  7. Fame, renown; புகழ். பொருபுக னல் லேறு (கலித். 102)
புகல்³ (pukal) — noun
  1. < புகு¹-
  2. Entering, going in; புகுகை. முனைபுகல் புகல்வின் (பதிற்றுப். 84, 17)
  3. Residence, dwelling; இருப்பிடம். புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை (ஐங்குறு. 295)
  4. Assistance, help; துணை. (பிங்.)
  5. Support, prop; பற்றுக்கோடு. மையணற்காளை பொய்புகலாக (நற். 179)
  6. Refuge, asylum; சரண். புகலது கூறுகின்றான் (கம்பரா. விபீடண. 109)
  7. Body; உடம்பு. (பிங்.)
  8. Receptacle for storing grain; தானியக்குதிர். (திவா.)
  9. Means; உபாயம். புக லொன்றில்லா வடியேன் (திவ். திருவாய். 6, 10, 10)
  10. Excuse; போக்கு. Loc. அவன் அடிக்கடி புகல் சொல்லுகிறான்
புகல்⁴ (pukal) — noun
  1. prob. புழல். [T. bōlu.] Hollowness; புரையுள்ளது. Tinn.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புகல்
  1. புகுகை
  2. இருப்பிடம்
  3. துணை
  4. பற்றுக் கோடு
  5. தஞ்சம்
  6. உடம்பு
  7. தானியக்குதிர்