பொன்

மினுக்கம் உள்ள ஒருவகை உலோகம், தங்கம். பொன்னூஞ்சல் பொன்னான வாக்கு

gold metal in general wealth

Tamil Wiktionary

பொன்
  1. மினுக்கம் உள்ள ஒருவகை உலோகம்
  2. தங்கம்.

Winslow (1862)

பொன் (poṉ) — noun
  1. Gold, சொர்ன்னம்
  2. Lukshmi–as of gold-color, இலக்குமி
  3. Beauty, elegance, comeliness, அழகு
  4. Metal in general. See கரும்பொன், செம்பொன்
  5. Jupiter–the gold-like planet, வியாழம்
  6. Portliness, grandeur, magnificence, பொலிவு. (சது.)
  7. A small gold-coin, பொற்காசு
  8. Lustre, splendor, brilliance, பிரகாசம்
  9. The sun, சூரியன்.–In composition, ன் may be changed to ற், before க், ச், த், ப், as பொற்கம்பி, பொற்சங்கிலி, &c. பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth. பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold? பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is extremely dear; (lit.) a particle for a gold- coin. இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil
  • பொற்கட்டி — A lump of gold in the mass.
  • பொற்கணக்கு — Table of weights for the precious metals, troy-weight, பொன்னிறையளவு.
  • பொற்கண்டை–பொற்கெண்டை–பொற்சரிகை — Threads of gold. See கெண்டை.
  • பொற்கலசம் — A golden vial.
  • பொற்கலம்–பொற்கலன் — A golden salver. 2. A golden ornament.
  • பொற்காசு — Gold-coin.
பொன் (poṉ)
  1. ..Ten fanams........?.

Fabricius (1972)

பொன் — noun
  1. gold சுவர்ணம்
  2. Lakshmi
  3. beauty, அழகு
  4. metal in general (as in கரும்பொன், iron etc.)
  5. a small gold coin
  6. lustre, brilliance, பிரகாசம்
  7. the sun, சூரியன். In combination ன் is changed into ற் before க, ச, த, ப)
  • பொன்விளையும் பூமி — a fertile soil, soil yielding gold.
  • பொற்கசை–பொற்கம்பி–பொற்சரடு — goldwire.
  • பொற்கட்டி — an ingot or lump of gold.
  • பொற்கண்டை–கெண்டை–சரிகை — gold fringe, threads of gold.
  • பொற்கலசம் — a golden vial.
  • பொற்கலம்–கலன் — a gold salver; 2. a gold ornament.

Tamil Moli Akarathi (1928)

பொன் (poṉ)
  1. அழகு, இரும்பு, இலக்குமி, ஒருநாணயம், சூரியன்,பஞ்சலோ கப்பொது, பிரகாசம், பொலிவு, பொன், வியாழம்
பொன் (poṉ)
  1. அரி, அருச்சுனம், அருத்தம், அனந்தம், ஆக்கம், ஆசை, ஆடகம், இரணியம், ஈகை, ஈழம், உடல், உ ரை, ஏகாகாரம், ஏமம், கணையம், கல்யாணம், கற்பூரம், கனகம், கனம், காங்கேயம், காஞ்சனம், காணம், காரம், கூழ், கைத்து, சந்திரம், சா தரூபம், சாமி, காரம், சாமீகரம், சாம்பூதநம், சுவணம், செங்கோல், செந்தாது, செம்பொன், சொன் னம், தசும்பு, தமனியம், தனம், திர வியம், தேசிகம், தேசி, தொடுக்கம், நிசி, நிதானம், நிதி, பண்டம், பிங்கலம், பீதகம், பீதமாம், பூரி, பொருள், பொலம், மாசை, மாகடு, மாடை, மாழை, வசு, வித்தம், வெ றுக்கை, வேங்கை, அன்றியுந் தாமரை யுருவாய்க் கிடக்கும் பொன்-பதும நிதி, சங்குரவாய்க்கிடக்கும்பொன்- சங்கநிதி
பொன் (poṉ)
  1. அழகு, இலக்குமி, பஞ்சலோக ப்பொது, பொலிவு, பொன், வியாழம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொன் (poṉ) — noun
  1. Gold, of which there are four kinds, viz., cātarūpam, kiḷicciṟai, āṭakam, cāmpūṉatam; சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என நான்கு வகைப்பட்ட தங்கம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218)
  2. Metal; உலோகம். (பிங்.) செம்பொன், வெண்பொன், கரும்பொன்
  3. Iron; இரும்பு. தூண்டிற் பொன்மீன் விழுங்கி யற்று (குறள், 931)
  4. Wealth; செல்வம். பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும் (நள. கலிதொடர். 68)
  5. Ornament; ஆபரணம். கடலுடுத்த காரிகை பொன் னணிந் திருந்தென (சீவக. 1250)
  6. Marriage badge; திருமங்கலியம். பொன்னைக் கொணர்ந்து . . . நீ பொன்புனைந் ததுவே (தஞ்சைவா. 359)
  7. A gold coin10 paṇam Rs. 1¼ ஒன்றேகால் ரூபா மதிப்புள்ள பொன்னாணயம்
  8. See பொன்மலை
  9. ஆணிப்பொன்வில்லி (குமர. பிர. மீனாட். பிள். 63)
  10. Grandeur, magnificence; பொலிவு. பொன்னார் வயற்பூம் புகலி (தேவா. 72, 2)
  11. Sallowness of complexion from love sickness; பசலை. வயங்கு பொன்னீன்ற . . . முலையினாளே (சீவக. 1530)
  12. Lustre, splendour, brilliance; பிரகாசம். (W.)
  13. Beauty, elegance, comeliness; அழகு. (பிங்.) பொன்புனைந்த கழலடியோன் (பு. வொ. 7, 2, கொளு)
  14. Preciousness, excellence; rarity; ஏற்றம். பொன்னிறை சுருங்கார் (சீவக. 2380)
  15. Lakṣmī, the Goddess of Fortune; இலக்குமி. பொன்றுஞ்சு மார்பன் (சீவக. 14)
  16. Jupiter; வியாழன். பொன் னொடு வெள்ளியும் . . . இருக்கை யீயவே (கம்பரா. மாரீச. 16)
  17. Sun; சூரியன். உடலுயிரும் பொன் விழியு மெனும் புணர்ப்பு (மணி. 6, 145)
  18. Pudendem muliebre; பெண்குறி. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொன்
  1. சாதரூபம், கிளிச்சிறை , ஆடகம், சாம்பூ