பொறை

சிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய ( 118) மலை நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை ( 430) பாரம் குழையு மிழையும் பொறையா ( 90)

take care

Tamil Wiktionary

பொறை — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய ( 118)
  2. மலை நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை ( 430)
  3. பாரம் குழையு மிழையும் பொறையா ( 90)
  4. கனம் பொறை தந்தனகாசொளிர் பூண் ( அதிகா. 40)
  5. பூமி பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50)
  6. பொறுமை வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(153)
  7. அடக்கம் அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் ( மீட்சி. 88)
  8. கருப்பம்
  9. வலிமை போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (வேத்திரகீய. 1)
  10. சலதாரை முதலிய அடைக்கும் கல்

Winslow (1862)

பொறை (poṟai) — noun
  1. Burden, load, சுமை
  2. Weight, gravity, பாரம்
  3. A mountain, மலை
  4. Earth, world, பூமி
  5. A stone to close up a channel, or a spout, சலதாரைமுதலியஅடைக்குங்கல்
  6. Patience, forbearance, பொறுமை; [ex பொறு, v.] (சது.)
  • பொறையன் — Any prince of the Sera dynasty, as lord of a mountainous district, சேரன். 2. Dharma, the eldest Panduva–as the patient one, கருமராசன். (சது.)
  • பொறையிலார் — Savages, foresters, hunters, as unforbearing, வேடர். (சது.)
  • பொறையுடைமை — Possession of patience.
  • பொறையுயிர்க்க — To become disburdened, பாரங்கழிய. 2. To be delivered of a child, பிள்ளைபெற. (p.)

Fabricius (1972)

பொறை — noun
  1. (பொறு) burden, load, சுமை
  2. weight, பாரம்
  3. a mountain, மலை
  4. the earth, பூமி
  5. patience, பொறு மை
  6. a stone to close up a channel or a spout, சலதாரை முதலிய அடைக் குங் கல்
  • பொறையன் — any king of the Sera dynasty, as lord of a mountainous district; 2. Yudhistra, the eldest of the Pandavas, famed for his patience.
  • பொறையிலார் — savages, hunters, as unforbearing.
  • பொறையுடைமை — possession of patience.

Tamil Moli Akarathi (1928)

பொறை (poṟai)
  1. கருப்பம், சலதாரை முத லிய வடைக்குங்கல், சிறுமலை, சுமை, பாரம், பூமி, பொறுமை இது பெரி யோரியல்பு ளொன்று, சாத்துவிக குணத்துமொன்று, மலை
பொறை (poṟai)
  1. சலதாரை முதலியவடைக்கு ங்கல், சுமை, பாரம், பூமி, பொறு மை, மலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொறை (poṟai) — noun
  1. < பொறு-
  2. Small hill, hillock; சிறு குன்று. அறையும் பொறையு மணந்த தலைய (புறநா. 118)
  3. Mountain; மலை. நெடும் பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430)
  4. [K. poṟe.] Burden, load; பாரம். (திவா.) குழையு மிழையும் பொறையா (கலித். 90)
  5. [K. poṟe.] Weight, heaviness; கனம். பொறை தந்தன காசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40)
  6. Earth; பூமி. (பிங்.) பொறைதரத் திரண்ட தாரு (இரகு. தசரதன்சாப. 50)
  7. Patience; forbearance; பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153)
  8. Calmness; meekness; அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையு நாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88)
  9. Pregnancy; கருப்பம். (சூடா.)
  10. Strength; வலிமை. போத காதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத. வேத்திரகீய. 1)