மகன்மை
மகன் தன்மை; புத்திரத்தன்மை; பிள்ளைமுறை ஆண்தன்மை; ஆண்மை பழைய வரி வகை
sonship
Tamil Wiktionary
மகன்மை — பெயர்ச்சொல் (Noun)
- மகன் தன்மை; புத்திரத்தன்மை; பிள்ளைமுறை
- ஆண்தன்மை; ஆண்மை
- பழைய வரி வகை
Tamil Moli Akarathi (1928)
மகன்மை (makaṉmai)
- ஆண்டன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகன்மை¹ (makaṉmai) — noun
- < மகன்
- Sonship; புத்திரன்றன்மை. அன்பினான் மகன்மை கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5)
- Manliness; ஆண்டன்மை. (யாழ். அக.)
மகன்மை² (makaṉmai) — noun
- cf. மகமை. An ancient tax; பழைய வரிவகை. வலங்கை யிடங்கை மகன்மையும் (S. I. I. iii, 115).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மகன்மை
- ஆண்தன்மை
- புதல்வன் தன்மை
- பழைய வரிவகை