மட்டை

மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது சாராயம் போன்றவற்றை அதிமாக அருந்துவதால் ஏற்படும் மயக்கநிலை தென்னை, பாக்கு மரங்களின் தழை / தோல்பகுதி

husk, shell of coconut bat, a club used to hit a ball leaf stalk of fern or palm; stem of plantain

Tamil Wiktionary

மட்டை — பெயர்ச்சொல் (Noun)
  1. மட்டைப்பந்து போன்ற ஆட்டங்களில் பந்தை அடிக்கப் பயன்படுவது
  2. சாராயம் போன்றவற்றை அதிமாக அருந்துவதால் ஏற்படும் மயக்கநிலை
  3. தென்னை
  4. பாக்கு மரங்களின் தழை / தோல்பகுதி

[object Object]

Winslow (1862)

மட்டை (maṭṭai) — noun
  1. Stem of the palmyra, cocoa, areca and other palm-leaves; also, in some places, of the plantain, மடல்
  2. Husk of a cocoa-nut, தேங்காய்மட்டை
  3. A stupid fellow, முட்டாள்
  4. [fig.] A snake, பாம்பு
  5. (சது.) A headless body, trunk, உடற்குறை. –Note. Most of the compounds are provincial
  • மட்டைகடிக்க — To bite the lips, as a child in weaning.
  • மட்டைகட்ட — To fasten a palmyra-stem-rind to the top of a basket. 2. To fasten splints on a broken limb.
  • மட்டைக்கங்கு — The lower and divided part of a palmyra-stem.
  • மட்டைக்கட்டுவடலி — A young palmyra-tree thick with leaves.
  • மட்டைக்குதிரை — Cross sticks set up to support a weaver's warp.
  • மட்டைக்கோரை — Cyperus procerus, and C. Congus. (Willd.)

Fabricius (1972)

மட்டை — noun
  1. stem of the palmyra, cocoanut and other palm leaves and also of the plantain, மடல்
  2. a stupid fellow, முட்டாள்
  3. a headless body, trunk
  4. (fig) a snake, பாம்பு
  • தேங்காய் மட்டை — the coir that covers a cocoanut.
  • மட்டைக் குதிரை — cross sticks set up to support a weaver's warp.
  • மட்டைதட்ட — to beat the integument of the cocoanut to form coir; 2. to become poor.
  • மட்டைத்தேள்–திருநீல கண்டன் — a small kind of scorpion; 2. a kind of centiped. .
  • மட்டையடியடிக்க — to beat with plantain stalks in sport; 2. to receive impolitely.

Tamil Moli Akarathi (1928)

மட்டை (maṭṭai)
  1. உடற்குறை, ஒருபாம்பு, கமுகு தெங்கு வாழை பனை யிவற்றின்மட் டை, முட்டாள்
மட்டை (maṭṭai)
  1. உடற்குறை, கமுகு தெங்கு பனை யிவற்றின் மட்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மட்டை¹ (maṭṭai) — noun
  1. perh. மடி¹-. [T. M. maṭṭa, K. Tu. maṭṭe.]
  2. Leaf-stalk of fern or palm; stem of plantain; தெங்கு பனை முதலிய வற்றின் மடல்
  3. Husk of coconut; தேங்கா யின் மேல் தோடு
  4. A bundle of 4500 betel leaves; 4500 வெற்றிலை அல்லது 45 கவுளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G. Tj. D. I, 134.)
  5. Bat; பந் தடிக்கும் மட்டை
  6. Snake; பாம்பு. மட்டையிடம் குட்டி வலம். (W.)
மட்டை² (maṭṭai) — noun
  1. prob. muṇḍa
  2. Baldness; மொட்டை. கொய்யப்பட்ட மட்டை யாகிய தலையுடனே (புறநா. 261, உரை)
  3. cf. அட்டை. Headless body, trunk; உடற்குறை. (திவா.)
  4. Stupid fellow; மூடன். (W.)
மட்டை³ (maṭṭai) — noun
  1. < மட்டம்¹
  2. Worthless person or thing; பயனற்றவ-ன்-ள்-து. இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும் (விறலிவிடு. 889)
  3. A variety of paddy, as inferior; ஒருவகை மட்டமான நெல்
  4. Coarse grain of paddy; மாசுள்ள நென்மணி

IndoWordNet

மட்டை — noun
  1. கிரிக்கெட் விளையாட்டில் பந்து அடிக்கப்படும் மரத்திலான ஒரு குச்சி

பேட் பந்தடிக்கும் மட்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மட்டை
  1. தென்னை, பனை முதலியவற்றின் மடல்
  2. தேங்காயின் மேல்தோடு
  3. நாற்பத் தைந்து கவளிகொண்ட வெற்றிலைக் கட்டு
  4. பந்தடிக்கும் மட்டை
  5. பாம்பு
  6. மொட்டை
  7. அட்டை
  8. உடற்குறை
  9. மூடன்
  10. பயனற்றவர்
  11. பயனற்றது
  12. ஒரு மட்டமான நெல்வகை
  13. மாசுள்ள நெல்மணி
  14. பிணம்