மாடம்
ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதி terrace, upper storey
storied house house, mansion, hall hut
Tamil Wiktionary
மாடம்
- ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதி
Winslow (1862)
மாடம் (māṭam) — noun
- A house, hall or palace, உப்பரிகை. [Compare மாடி.]
- As மாடக்குழி. மாடமாளிகைகூடகோபுரங்கள்....... Halls, palaces, pinnacles and towers
- பிள்ளையார்மாடம் — A niche in a wall for an image of பிள்ளையார்.
- விளக்குமாடம் — A hole in a wall for a lamp.
- மாடக்குழி — [vul. மாடாக்குழி.] A niche in a wall.
- மாடப்புறா — The domestic pigeon.
- மாடப்புறாக்கண்ணிறம் — A medicinal plant. See அமுக்கிறா.
Fabricius (1972)
மாடம் — noun
- a house, palace, வீடு
- a hall, மண்டபம்
- a little hole or niche in a wall, மாடக்குழி
- மாட மாளிகை கூட கோபுரங்கள் — halls, palaces, pinnacles & towers.
- மாடப்புறா — the domestic pigeon.
- விளக்குமாடம் — a niche for a lamp.
மாடம் — noun
- மாஷம், s. a kind of pulse, green gram, phascolus mungo, உளுந்து.
Tamil Moli Akarathi (1928)
மாடம் (māṭam)
- உப்பரிகை, உழுந்து, மண்டபம்
மாடம் (māṭam)
- மண்ணீடு, வேயுள்
மாடம் (māṭam)
- உழுந்து, வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாடம்¹ (māṭam) — noun
- Storied house; உபரிகையுள்ள வீடு. மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா. 797, 7)
- House, mansion, hall; வீடு. மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச. 16, 4). (பிங்.)
- See மாடக்கோயில். எண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ். பெரியதி. 6, 6, 8)
- Hut; குடிசை. தோட்டக்காவலுக்காக ஓலை மாடம் மடக்கினான். Nāñ
- See மாடக்குழி
மாடம்² (māṭam) — noun
- < māṣa
- Black gram; உழுந்து. (பிங்.)
- A measure of weight of 10 kuṉṟi; குன்றி பத்துக்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.)