வடு

Tamil Wiktionary

வடு — பெயர்ச்சொல் (Noun)
  1. வட்டம்
  2. தழும்பு
  3. பிஞ்சு
  4. மாம்பிஞ்சு

Winslow (1862)

வடு (vaṭu) — noun
  1. gen. வடுவின், pl. வடுக்கள்.] Unripe fruit, commonly very green mangoes, பிஞ்சு
  2. A sear, wale, cicatrice, தழும்பு
  3. Taunt, reproach, குற்றம்
  4. A wart, a mole, மச்சம். (c.)
  5. Copper, செம்பு
  6. A kind of lute, மருதயாழ்த்திறம்
  7. A beetle, வண்டு. (சது.) அதுவடுவும்புள்ளியுமாயிருக்கிறது. It has warts and spots. ஆறாதேநாவினாற்சுட்டவடு. The wound inflicted by a burning tongue never heals. (குறள்.)
  • வடுச்சொல்ல — To upbraid, reproach, taunt; to cast in the teeth, குற்றங் கூற.
  • வடுப்பட — To be injured as fruits. 2. To be indented. 3. To be stigmatized.
  • வடுவுரை — A reproach, a scandal, a stigmatizing word, language which injures another's character. (Ell. 287.)
வடு (vaṭu)
  1. , க்கிறது, த்தது, க்கும்,வடுக்க, v. n. To set, as the bud of fruits, பிஞ்சுவிட. (p.)

Fabricius (1972)

வடு — noun
  1. (pl. வடுக்கள்) unripe fruit, very tender mangoes, பிஞ்சு
  2. a scar, a mark of a stripe or burn, தழும்பு
  3. taunt, reproach, குற்றம்
  4. a wart or mole, மச்சம்
  5. copper, செம்பு
  6. a kind of lute, மருத யாழ்த்திறம்
  7. a beetle, வண்டு
  • வடுச்சொல்ல–க்கூற–குற்றங்கூற — to reproach, to cast in the teeth, .
  • வடுப்பட்டிருக்க — to be injured, to be indented, to be stigmatized.
  • வடுப்பிஞ்சு — unripe, very tender fruit.
  • வடுவில்லா மனுஷர் — people without blemish.
  • வடுவும் புள்ளியுமாயிருக்க — to be full of warts and spots.
வடு — v. i.
  1. v. i. set, as the bud of fruits, பிஞ்சுவிடு.

Tamil Moli Akarathi (1928)

வடு (vaṭu)
  1. இளங்காய், குற்றம், செம்பு, தழு ம்பு, பிரமசாரி, மச்சம், மருதயாழ்த்தி றம், வசை, வடுவென்னேவல், வண் டு, வாலிபன், வாள்
வடு (vaṭu)
  1. இளங்காய், குற்றம், செம்பு, தழும் பு, மருதயாழ்த்திறம், வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வடு¹ (vaṭu) — noun
  1. cf. வடி⁵. [K. miḍi.] Unripe fruit, especially very green mango; மாம் பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.)
  2. Wart, mole; உடல்மச்சம். (W.)
  3. Scar, cicatrice, wale; தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14)
  4. cf. வடி⁷. Chiselled figure; உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252)
  5. Mouth of an ulcer or wound; புண்வாய். தாழ் வடுப் புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11)
  6. Fault, defect; குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121)
  7. Reproach; பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549)
  8. Injury, calamity; கேடு. நாயகன் மேனிக் கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5)
  9. Fine, black sand; கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556)
  10. Copper; செம்பு. (பிங்.)
  11. Sword; வாள். (யாழ். அக.)
  12. Beetle; வண்டு. (பிங்.)
வடு³ (vaṭu) — noun
  1. < vaṭu
  2. Celibate student; பிரமசாரி. Loc
  3. See வடுகன்¹
  4. 3. Bhairava; வைரவன்
  5. Clever boy; புத்திசாலிப் பையன். Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வடு
  1. தழும்பு
  2. மாம்பிஞ்சு
  3. இளங்காய்
  4. உடல் மச்சம்
  5. உளியாற் செதுக்கின உரு
  6. புண்வாய்
  7. குற்றம்
  8. பழி
  9. கேடு
  10. கருமணல்
  11. செம்பு
  12. வாள்
  13. வண்டு
  14. பிரமசாரி
  15. இளைஞன்
  16. வைரவன்
  17. புத்திசாலிப் பையன்