வரத்து

ஆங்கிலம் - inflow வரத்து என்பது போக்கு என்பதன் எதிர்ச்சொல் (inflow is the opposite of outflow)

advent, coming in inlet or source of water supply (as to a tank) income, receipts, perquisite

Winslow (1862)

வரத்து (varattu) — noun
  1. A due, a right, a perquisite, வருமானம்
  2. Income, revenue, resources, அரசிறை
  3. See வரு, v. (c.) வருகிறவரத்தின்மேலேசெலவழிக்கிறது. Limiting expenditure to income

Fabricius (1972)

வரத்து — noun
  1. (வா) income, resources வருமானம்
  2. revenue, அரசிறை
  3. advent, வருகை
  4. the place where the water flows into a tank
  5. the conflur of the water itself
  • இந்தக் குளத்துக்கு வரத்தெங்கே — where is the entry of the water in this pond?
  • வரத்தாறு — a tributary stream.
  • வரத்துப்போக்கு — coming and going, trequenting.
  • போக்கும் வரத்துமாயிருக்கிறது — there is a frequent intercourse.

Tamil Moli Akarathi (1928)

வரத்து (varattu)
  1. வருகை, வருமானம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரத்து (varattu) — noun
  1. < வா-
  2. Advent, coming in; வருகை. நம் கோவலன் வருகின்ற வரத்து (சிலப். 9, 64-9, உரை)
  3. Inlet or source of water supply, as to a tank; நீர்வரும் வழி. இந்தக் குளத்துக்கு வரத்து எங்கே?
  4. Income, receipts; perquisite; வரும்படி. ஒருவரத்துமின்றிச் செலவு செய்வோர் (அறப். சத. 56)
  5. Credit entry in an account; கணக்கில் வரவுதொகை காட்டும் ஷரத்து
  6. Increase; பெருக்கு. வெள்ளம் வரத்தா வற்றா ?
  7. Limit, boundary; எல்லை. இந் நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடி மக்களை (Pudu. Insc. 176)
வரத்து (varattu) — noun
  1. < id
  2. Genealogy; lineage; வமிசாவளி. ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச் சொல்லியிறே கவிபாடுவது (திவ். அமலனாதி. 1, வ்யா. பக். 24)
  3. Chirping of lizard indicating the arrival of guests; விருந்து வரவைக் குறிக்கும் பல்லிச்சொல். (கெளளி சா. 2.)
  4. Order; உத்திரவு. நிலநிவந்தஞ்செய்ய வரத்துத் தருகவென் (S. I. I. vii, 482)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரத்து
  1. வருகை
  2. நீர்வரும் வழி
  3. வரும்படி, வருவாய்
  4. பெருக்கு
  5. எல்லை
  6. வரவுதொகை காட்டுங் கணக்கு
  7. ஆணை
  8. மரபுவழி