வழிபாடு
worship
Tamil Moli Akarathi (1928)
வழிபாடு (vaḻipāṭu)
- அப்பியாசம், ஆராதனை, தாழ்மை, வணக்கம், வழிபடல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வழிபாடு (vaḻipāṭu) — noun
- < வழிபடு¹-
- Proceeding on the way; வழியிற்செல்லுகை
- Following; பின்பற்றுகை
- Reverence, adoration; வணக்கம். பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர் (ஏகாம். உலா, 371)
- Ritual; worship; பூசனை. (பிங்.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு (S. I. I. i, 150)
- Use, custom, habit; வழக்கம். (W.)
- Religious system; சமயக்கோட்பாடு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வழிபாடு
- வழியிற் செல்லுகை
- பின்பற்றுகை
- வணக்கம்
- பூசனை
- வழக்கம்
- சமயக் கோட்பாடு