வாகை

வெண்ணிற நடுப்பகுதியும் ஓரத்தில் பச்சைநிறமும் கொண்டு சிறு குடை விரித்தாற்போல் இருக்கும் தூங்குமூஞ்சி மரப்பூவையொத்த மலர். (Albizia lebbeck) T.Lex; siris. வெற்றியாளர் அணியும் மாலை. வெற்றி.

Albizia lebbeck, known by the names siris, sirissa, East Indian walnut, woman's tongue tree, lebbek (syn. Mimosa flexuosa Rottler ex Wight & Arn.) victory chaplet of sirissa flowers worn by victors

Tamil Wiktionary

வாகை
  1. (பெ)
  2. வெண்ணிற நடுப்பகுதியும் ஓரத்தில் பச்சைநிறமும் கொண்டு சிறு குடை விரித்தாற்போல் இருக்கும் தூங்குமூஞ்சி மரப்பூவையொத்த மலர். (Albizia lebbeck) T.Lex; siris.
  3. வெற்றியாளர் அணியும் மாலை.
  4. வெற்றி.

Winslow (1862)

வாகை (vākai) — noun
  1. One of the eight kinds of garlands. See வெற்றிமாலை
  2. Division of a moral book, a moral subject, அறத்தின்றுறை
  3. A gift, beneficence, ஈகை
  4. Good behavior, ஒழுக்கம்
  5. Plenty, மிகுதி
  6. Victory, வெற்றி
  7. Penance, தவம்பண்பு
  8. (c.) A flowering tree. ஓர்பூமரம்
  9. A tree whose leaves are medicinal, Mimosa flexuosa. The different kinds are இலைவாகை, காட்டுவாகை, and பெருவாகை; also நிலவாகை, a plant, Cassia senna
  • வாகைமாலை — A wreath of its flowers. See வெற்றிமாலை. 2. A panegyric on a victor crowned with a wreath of வாகை. See பிரபந்தம்.

Fabricius (1972)

வாகை — noun
  1. a tree whose leaves are medicinal, mimosa flexuosa
  2. a garland of mimosa flowers, one of the 8 kinds of garlands, வெற்றிமாலை
  3. good behaviour, ஒழுக்கம்
  4. plenty
  5. victory
  6. penance
  7. nature, பண்பு
  8. a gift, beneficence, ஈகை

Tamil Moli Akarathi (1928)

வாகை (vākai)
  1. அறத்தின்றுறை, ஈகை, உண் மை, ஒழுக்கம், ஒருமரம், அது தச மூலத்தொன்று, குணம், தவம், நலன், மாட்சிமை, மிகுதி, முயற்சி, வாகை, மாலை, வெற்றி
வாகை (vākai)
  1. அறத்தின்றுரை, ஈகை, ஒழுக் கம், ஓர்வகைமரம், தவம், மிகுதி, வெற்றி, வெற்றிமாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாகை (vākai) — noun
  1. [K. Tu. bāge, M. vāga.] Sirissa, Albizzia; மரவகை
  2. Fragrant sirissa. See கருவாகை
  3. West Indian pea-tree. See அகத்தி. புகழா வாகைப் பூவி னன்ன வளை மருப்பேனம் (பெரும்பாண். 109)
  4. Chaplet of sirissa flowers worn by victors; வெற்றியாளர் அணியும் மாலை. (பிங்.) இலைபுனை வாகைசூடி (பு. வெ. 8, 1, கொளு)
  5. Victory; வெற்றி. வாக்கும் வாகையும் வண்மையு மாறிலான் (இரகு. யாகப். 38). (பிங்.)
  6. (Puṟap.) Theme of a conqueror wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; பகை யரசரைக் கொன்று வாகைப்பூச்சூடி வெற்றியா லார வாரிப்பதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 1.)
  7. (Puṟap.) Theme in which the members of the four castes, hermits and others exalt their characteristic attainments; நான்கு வருணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத் தலைக்கூறும் திணை. (தொல். பொ. 74.)
  8. Good behaviour; நல்லொழுக்கம். (W.)
  9. Gift; ஈகை. (W.)
  10. Plenty; மிகுதி. (W.)
  11. Nature; பண்பு. (W.)
  12. Penance; தவம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாகை
  1. மரவகை
  2. கருவாகை
  3. அகத்தி
  4. வெற்றி யாளர் அணியுமாலை
  5. வெற்றி
  6. பகை யரசரைக் கொன்று வாகைப்பூச் சூடி. வெற்றி யில் ஆரவாரிப்பதைக் கூறும் புறத்துறை
  7. நான்கு வருணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத்தலைக் கூறும் திணை
  8. நல்லொழுக்கம்
  9. ஈகை
  10. மிகுதி
  11. பண்பு
  12. தவம்