விமானம்

பொறிமுறை வழுவைக் கொண்டு இறக்கைகளில் ஏற்படும் அமுக்க வேறுபாட்டைப் பயன்படுத்தி பறக்கும் வானூர்தியொன்று. விமானம் ஒரு வடமொழிச் சொல்லாகும். ஆங்கிலம் - aeroplane

aeroplane the mount or vehicle of a god

Winslow (1862)

விமானம் (vimāṉam) — noun
  1. A self-moving chariot, or car, of the gods, திவ்வியரதம்
  2. A shrine, தேவர்கோயில்
  3. The world of the celestials, தேவலோகம்
  4. The fourth lunar mansion, உரோகிணிநாள்
  5. A house seven stories in height, ஏழடுக்குமெத்தை. (சது.)

Fabricius (1972)

விமானம் — noun
  1. a self-moving chariot or car of the gods, தேர்
  2. a shrine, கோவில்
  3. the world of the celestials, தேவலோகம்
  4. the 4th lunar mansion, உரோகிணிநாள்
  5. a house seven storeys in height

Tamil Moli Akarathi (1928)

விமானம் (vimāṉam)
  1. அவசங்கை, அளவு, உரோக ணி, இராசமாளிகை, ஏழ்நிலைமேடை, ஒருவகைத்தேர், குதிரை, தேவர் கோயில் தேவலோகம், வாகனம்
விமானம் (vimāṉam)
  1. உரோகணிநாள், ஏழிநிலைமே டை, தேர், தேவர்கோயில், தேவ லோகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விமானம் (vimāṉam) — noun
  1. < vimāna
  2. Fabulous, self-moving aerial car; ஆகாச ரதம். தளிரியில் விமானஞ் சேர்ந்தாள் (சீவக. 564)
  3. The vehicle of the Moon-God; சந்திரனூர்தி. (பிங்.)
  4. Vehicle; ஊர்தி
  5. Turret of a temple surmounting the cell in which the chief image is placed; கர்ப்பக்கிருகத்தின் மேலுள்ள தூபி. தூயவிமானமுந் தூலமதாகும் (திருமந். 1718). விமானப் புரிசைசெய்து (திருவாலவா. 48, 22)
  6. Seven-storied palace; ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை. (W.)
  7. Palace; அரண்மனை. (இலக். அக.)
  8. Temple; தேவர்கோயில். (W.)
  9. The world of the celestials; தேவலோகம். (சூடா.)
  10. The fourth nakṣatra. See உரோகிணி. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விமானம்
  1. வானூர்தி
  2. சந்திரன்னர்தி
  3. ஊர்தி
  4. தூண்
  5. ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை
  6. அரண்மனை: தேவர்கோயில்
  7. தேவலோகம்
  8. உரோகிணிநாள்