அகவை

ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை "ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்" என்று குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலம் : age : వయసు

age referring to certain age limit.

Tamil Wiktionary

அகவை
  1. ஒருவர் பிறந்ததில் இருந்து எத்தனை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஆண்டு அளவு; வயது- (எ.கா.) சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வயது 12 என்பதை "ஈர் -- ஆறு ஆண்டு அகவையாள்" என்று குறிப்பிடப்படுகிறது.

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகவை (akavai) — noun
  1. < அகம்¹
  2. Inside; உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா. சிவிவி. 143)
  3. Age within a certain limit; உட்பட்ட பிரா யம். ஈராறாண்டகவையாள் (சிலப். மங்கலவாழ்). — part. A loc. ending; ஏழாவதனுருபு. ஆடித்திங்க ளகவை யின் (சிலப். உரைபெறுகட். 3)

Winslow (1862)

அகவை (akavai) — noun
  1. Interior, internal thing or quality. (in சிலப்பதி) உட்பொருள்
  2. Age, வயது (திருவிளை.) (p.)

Fabricius (1972)

அகவை — noun
  1. age, வயது. "ஈராண்டகவையார்" சிலப்பதிகாரம்.

Tamil Moli Akarathi (1928)

அகவை (akavai)
  1. உட்பொருள், வயது
அகவை (akavai)
  1. பதினாறுவயதிற்கு உட்பட்ட பிராயத்தையுடையவள்
அகவை (akavai)
  1. உட்பட்டபிராயம்

IndoWordNet

அகவை — noun
  1. பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

வயது வயசு பருவம் நேரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகவை
  1. உட்பட்டது
  2. உட்பொருள்
  3. உள்ளிடம்