அந்தஸ்து

தகுதி; பெருமை; செல்வாக்கு; படிநிலை குமுகத்தில் (சமூகத்தில்), அல்லது பதவிநிலை போன்றவற்றில் உள்ள செல்வாக்கு அல்லது செல்வ, உரிமைப் படிநிலை, நிலைமை; செல்வாக்கு, செல்வம், உரிமை போன்றவற்றில் ஒருவர் எய்துவதாக நினைக்கும் தகுதிநிலை; பெருமை status, position, rank, condition, standing

Status

Tamil Wiktionary

அந்தஸ்து — பெயர்ச்சொல் (Noun)
  1. தகுதி; பெருமை; செல்வாக்கு; படிநிலை
  2. குமுகத்தில் (சமூகத்தில்), அல்லது பதவிநிலை போன்றவற்றில் உள்ள செல்வாக்கு அல்லது செல்வ, உரிமைப் படிநிலை, நிலைமை; செல்வாக்கு, செல்வம், உரிமை போன்றவற்றில் ஒருவர் எய்துவதாக நினைக்கும் தகுதிநிலை; பெருமை

Winslow (1862)

அந்தஸ்து (antastu)
  1. (Hin.) Order, regularity, ஒழுங்கு
  2. Condition, நிலை. உன்னந்தஸ்துக்கிதுயோக்கியமல்ல. This does not agree with your circumstances

Fabricius (1972)

அந்தஸ்து — noun
  1. (Hind.) rank, condition, position, state நிலைமை.

Tamil Moli Akarathi (1928)

அந்தஸ்து (antastu)
  1. ஒழுங்கு, நிருவாகம், நிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அந்தஸ்து (antastu) — noun
  1. Rank, condition, standing; நிலைமை
  2. Storey of a building; மேல்மாடி
  3. Order, regularity; ஒழுங்கு. இவற்றை அந்தஸ்தோடு வை. (R.)

IndoWordNet

அந்தஸ்து — noun
  1. பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை

செல்வாக்கு புகழ் கீர்த்தி