இழ

ஒருவரிடம் இருந்த ஒன்று இல்லாமல் போ(தல்) (ஒரு பொருளை அல்லது நலத்தை அல்லது ஏதொன்றையும்) தொலை(த்தல்) விடு(தல்)

to lose to forfeit

Tamil Wiktionary

இழ
  1. ஒருவரிடம் இருந்த ஒன்று இல்லாமல் போ(தல்)
  2. (ஒரு பொருளை அல்லது நலத்தை அல்லது ஏதொன்றையும்) தொலை(த்தல்)
  3. விடு(தல்)
  4. அழி
  5. அழி
  6. அழிந்து போ (தல்)
  7. இறந்ததால் இல்லாது போ(தல்)
  8. துற (த்தல்) [உயிர் இழத்தல் இறந்து போதல்]

Winslow (1862)

இழ (iḻa) — verbal noun
  1. , க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. a. To lose, forfeit, to be bereaved of, to suffer loss, இழந்துபோக.
  • இழப்பு — Loss, privation, forfeiture, இழந்துவிடுகை.
  • இழப்புணி — One who has lost a child, a husband, property, &c.
  • இழவு — Loss, deprivation, forfeiture, bereavement, நஷ்டம். 2. Death, மரணம். அந்தவீட்டிலேயிழவுபட்டபாடாயிருக்கிறது...... There is affliction in that house, as if a death had occurred there.
  • இழவுகாத்தல் — Keeping close to the house–as mourners till after the eighth day of the funeral ceremony.
  • இழவுகாரன்–இழவுக்குரியவன் — The chief mourner at the funeral.
  • இழவுகொடுக்க–இழவுக்கடிக்க — To mourn at a funeral, to condole with, to bewail the dead–as women do, beating their breasts, &c. அப்படிச்செய்துபோட்டு அவனோடே இழவு கொடுக்கிறதார்? Who will expose himself to be troubled by him, for doing so?

Fabricius (1972)

இழ — v. t.
  1. v. t. lose, suffer lose, இழந்து போ.
  • இழப்பாளி — a prodigal, waster.
  • இழப்பு — loss, privation.
  • இழப்புணி — a poor destitute man, one that has lost all he had.
  • இழந்த நாள் — day lost.

IndoWordNet

இழ — verb
  1. ஒரு பொருளின் குணங்களிலிருந்து குறைவடைதல்

நஷ்டமடை சேதமடை குறை இறங்கு