குறை

நொட்டை,நிறைவற்றது,தவறு,மிச்சம் புலால் நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை

to diminish, decrease, lessen, abate, wane, dwindle, decline to be reduced in value, in estimation, in circumstances, in rank to be wanting, to prove insufficient, to be short

Tamil Wiktionary

குறை — பெயர்ச்சொல் (Noun)
  1. நொட்டை
  2. நிறைவற்றது
  3. தவறு
  4. மிச்சம்
  5. புலால்

[object Object], [object Object]

குறைவு குறைப்பு குறைபடு குறைபாடு குறைக்கடத்தி குறைகூறு அரைகுறை பற்றாக்குறை போதாக்குறை நிறைகுறை பார்வைக்குறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குறை³ (kuṟai) — noun
  1. Deficiency, imperfection, want, default; குறைபாடு. குறைதவிர் நிலைமையாற் குயிற் றுஞ் சாலையுள் (கந்தபு. வரைபுனை. 20)
  2. Fault, defect, flaw; குற்றம். என்பாற் குறையை நினைந்து மறாது (தஞ்சைவா. 388)
  3. Indigence, poverty; வறுமை. (பிங்.)
  4. Complement, balance, arrears, remainder; எஞ்சியது. நிறைதவத்தின் குறை முடித்து (கம்பரா. சூர்ப்ப. 114)
  5. Dissatisfaction, grievance; மனக்குறை. என்ன குறை நமக்கே (திவ். திருவாய். 6, 4, 1)
  6. Vow requiring fulfilment; பிரார்த்தனைக்கடன். திருப்பதிக்குக் குறைசெலுத்தப்போ னேன்
  7. That which is indispensable; இன்றி யமையாப்பொருள். வினைக்குறை தீர்ந்தாரின் (குறள், 612)
  8. Business that has to be done; காரியம். கொற்றநீ கொடுக்கல் வேண்டுங் குறையென (சீவக. 1647)
  9. Request; வேண்டுகோள். எம்மனந் தெளியக்காட்டு தல் குறையென (பெருங். மகத. 15, 37)
  10. Needs; வேண்டுவது. உறைசிறியாருண்ணடுங்க லஞ்சிக் குறை பெறின் (குறள், 680)
  11. Piece, section; துண்டம். கருப்புக்குறையும் (சேதுபு. முத்தீர். 18)
  12. Small isle, ait in a river; ஆற்றிடைக்குறை. குறையெலாஞ் சோலை (கம்பரா. பூக்கொய். 2)
  13. (Gram.) Omission of a letter, as syncope, apocope, aphæresis; சொல்லின் எழுத்துக்குறை. கடைக் குறை (நன். 156)
  14. (Gram.) Genitive case; ஆறாம்வேற்றுமை. விளிகுறை யிரண்டையும் விட்ட வேற்றுமைகள் (இலக். கொத். 14)
  15. Piece of flesh, as prepared for table; உண்ணுதற்குப் பக்குவப் படுத்திய தசை. வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை (பெரும்பாண். 472)
  16. A kind of vocal music; ஒரு தாக்குடைய மிடற்றுப்பாடல்வகை. நிறைகுறை தோன்ற (பரிபா. 17, 18)
  17. Tribute, revenue; அரசிறை. (W.)

Winslow (1862)

குறை (kuṟai) — noun
  1. Dificiency, defalcation, imperfection; failure, ஊனம்
  2. Indigence, poverty, destitution, தரித்திரம்
  3. Request, petition, solicitation, கூறுங்குறை
  4. Complement, balance, the part wanting, arrears, ஏஞ்சல்
  5. Remainder, overplus, remnant, the rest, residue, சேடம்
  6. Fault, defect, flaw, குற்றம்
  7. Dissatisfaction, grievance, umbrage, வெறுப்பு
  8. displeasure, indignation–as of a demon of deity, in consequence of accustomed offerings being withholden, தெய்வக்குறை
  9. Tribute; revenue, அரசிறை
  10. [in gram.] Abscission, cutting off–as syncope, apocope, &c.; omission, suppression, சொல்லின் குறை. அவனுக்கென்மேற்குறையுண்டு. He is displeased with me; he has a complaint against me. இனியெனக்கென்னகுறை. What can I need more?
  11. What defect is there in me now?
  • குறைகொள்ள–குறையாயெண்ண — To take a thing amiss, to feel aggrieved, to be piqued, to complain.
  • குறைகோள் — Solicitation, petition, mendicity, இரத்தல்.
  • குறைசொல்ல — To complain, to state grievances, to utter complaints, to express dissatisfaction. 2. To reveal one's wants, குறைகூற. 3. To change with fault; to censure, criticise; to blame.
  • குறைதீர — To be supplied–as wants. 2. To be satisfied.
  • குறைதீர்க்க–குறையாற்ற–குறைநீக்க — To supply wants, to satisfy; to relieve necessities. 2. To pacify, appease. 3. To fulfil an obligation.
  • குறைமுடிக்க — To grant requests. 2. To supply wants. 3. To take revenge.
குறை (kuṟai) — infinitive
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To diminish, decrease, lessen, abate, wane, shorten, dwindle, decline, சிறுக
  2. To be reduced in numbers, value, circumstances; to be lowered in rank, estimation, கெட
  3. To be wanting, to prove insufficient, to lack, to be short in weight, measure, number, &c., to be scanty, ஏஞ்ச
  4. To be imperfect, incomplete, unfinished, defective, deficient, ஈனமாக
  5. [in gram.] To be cut off, dropped, omitted, suppressed, &c., சொற்குறைந்துவர
  6. To be scarce, dear, difficult of attainment, அருமையாயிருக்க
  • குறைய — To be insufficient, to be wanting.
  • ஏறக்குறைய — Nearly, almost, about. நடைகுறைந்துபோயிற்று. He now cannot walk much. 2. His influence is reduced. 3. The speed is reduced–as of horses, cattle, &c.
  • குறைந்தவிலை — A dear bargain; a high price. 2. A reduced price, a low price.
  • குறைந்தமரக்கால் — A scant measure.
  • வயிறுகுறைய — To be unsatisfied –as hunger.
  • குறைச்சல் — [vul. for. குறைதல்.] Defficiency, dearness, poverty, displeasure, complaint, &c. குறைச்சலல்ல. It is not dear.
குறை (kuṟai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To lessen, shorten, curtail, contract, deduct, சுருக்க
  2. To reduce one's circumstances, power, authority, &c., to cut off, crop; to cut or hew down, to fell, குறுக்க, தறிக்க
  3. To destroy, அழிக்க
  • குறைத்துக்கொடுக்க — To reduce payment, to pay less than the expected or stipulated sum. 2. To supply insufficiently–as food, &c.
  • குறைத்துப்பரிமாற — To provide or distribute food, &c. on a reduced scale.
  • குறைத்துப்போட — To diminish, curtail.
  • குறைத்துவர — To continue to decrease.
  • வயிற்றைக்குறைக்க — To live abstemiously, either to save money or from necessity. 2. To diminish the supplies of dependents, &c.

Fabricius (1972)

குறை — noun
  1. want, deficiency, poverty, தரித்திரம்
  2. remainder, மிச்சம்
  3. discontent, dissatisfaction, grievance, indignation, வெறுப்பு
  4. flaw, defect, fault, guilt, குற்றம்
  • அவன் என்மேல் குறையாயிருக்கிறான்–அவனுக்கு என்மேல் குறையுண்டு — he has a complaint against me, he is displeased with me.
  • குறைகொள்ள–குறைகோள் — to complain, to feel aggrieved; , solicitation, petition.
  • குறைக்காரியம்–குறைக்கருமம் — the remainder of the business etc; half-finished work.
  • குறை சொல்ல — to complain.
  • குறைதீர — to be freed from want, to be content; to be satisfied.
  • குறைத்தலை — a headless trunk.
குறை — v. i.
  1. v. i. be short, be missing, wanting, எஞ்சு
  2. diminish, grow scarce, less, dear, சிறுகு
  3. be lowered in rank, estimation etc. கெடு
  4. droop in affliction, வருந்திவாடு
  5. be cut off, வெட்டப்படு
  6. be elided as a letter (Gram.) எழுத்துக்கெடு
  • குறைச்சல் — ( குறைதல்), v. n. defect, want, scarcity, dearness.
  • அது குறைச்சலல்ல — it is not dear; it is not less than what is required.
  • குறைச்சலாய் வாங்க — to buy dear; to buy less than what is wanted.
  • குறைச்சலாய்ப்–குறைவாய்–பேச — to speak ill or depreciatingly of a person.
  • குறைந்தபட்சம் — at least, not less than.
  • குறையப்பண்ண — to diminish.
குறை — v. t.
  1. v. t. shorten, diminish, curtail, சுருக்கு
  2. nip off, cut off, தரி
  3. destroy, அழி
  4. file, அராவு
  5. draw as water, முக
  • குறைத்தல்–குறைப்பு — reduction, diminution.
  • வயிற்றைக்குறைக்காதே — do not shor- ten the food.
  • குறைத்துப் போட — to diminish, to curtail.

Tamil Moli Akarathi (1928)

குறை (kuṟai)
  1. அரசிறை, காரியம், குறைந்திரு ப்பது
  2. குறையென்னேவல், குற்றம், சேடம், தரித்திரம், தவறு,நிறைவற் றது, மன்றாட்டு, மிச்சம், வெறுப்பு
குறை (kuṟai)
  1. அரசிறை, குறையென்னேவல், குற்றம், தரித்திரம்

IndoWordNet

குறை — verb
  1. ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.

இறங்கு மாறுதல் ஏற்படுத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குறை
  1. குற்றம்
  2. குறைபாடு
  3. வறுமை
  4. எஞ்சியது
  5. மனக்குறை
  6. தவறு
  7. நேர்த்திக்கடன்
  8. யமையாப் பொருள்
  9. செயல்
  10. வேண்டுகோள்
  11. வேண்டுவது
  12. துண்டம்
  13. ஆற்றிடைக்குறை
  14. சொல்லின் எழுத்துக்குறை
  15. றுமை
  16. உண்ணுந்தசை
  17. அரசிறை