ஈர்
இரண்டு கரும்பு ஈர்க்கு
twice, two, double wet, moist moisture, wetness
Tamil Wiktionary
ஈர் — பெயர்ச்சொல் (Noun)
- இரண்டு
- ஈரம்
- பசுமை
- இறகு
- கரும்பு
- ஈர்க்கு
- நுண்மை
- இனிமை
- பேனின் குஞ்சு அல்லது முட்டை; ஈரு
Winslow (1862)
ஈர் (īr) — noun
- A nit, மயிரிற்பற்றுமீர். (c.)
- The termination of verbs in the second person plural, முன்னிலைப்பன்மைவிகுதி
- Two a modification of இரு from இரண்டு; which see
- ஈர்கொல்லி–ஈர்கோலி–ஈர்வலி–ஈர்வாரி — [vul. ஈருளி.] A kind of wooden comb for clearing the hair of nits.
- ஈர்கொல்லிக்கொடி — A kind of climbing plant, ஓர்கொடி, Pentatropis microphylla.
- ஈர்ப்பி — Nits, scurf, dandruff in the hair, ஈர்.
- ஈர்ப்பிவைக்க — To be formed –as nits, or scurf in the hair.
- ஈர்வலித்தல் — Combing out nits, ஈர்வாரல்.
ஈர் (īr) — noun
- , கிறேன், ந்தேன், வேன், ஈர, v. a. To cut, mince, hack, chop, வெட்ட
- To split, cleave, part asunder, பிளக்க
- To saw, அறுக்க. (p.)
- ஈரரிவாள்–ஈர்வாள் — A saw, இரம்பம்; [ex வாள், a long blade.]
- ஈர்வு — Cutting, splitting, sawing, வெட்டுகை.
ஈர் (īr) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pull, draw, attract–as the magnet; to drag, carry away–as a current, to draw into, இழுக்க
- To saw, அறுக்க
- To split, பிளக்க
- To peel, flay, உரிக்க. (p.) நார்த்தொடுத்தீர்க்கிலென். What though (a corpse) be dragged along with a leather thong. (நாலடி.)
- யானையீருரி — A skin stripped off an elephant.
- ஈர்ப்பு — Draught, pulling, a pull, tug, attraction, இழுப்பு. 2. Lock-jaw, tetanus, contortion of the features or the limbs, இசிவு.
Fabricius (1972)
ஈர் — adj. pref
- pref (from இரண்டு, used before words beginning with vowels, as இரு is used before consonants), two.
- ஈரடி — two lines, doubtfulness, ambiguity.
- ஈராட்டி — two wives.
- ஈராயிரம் — two thousand.
- ஈரரசு — diarchy.
- ஈராறு — twice six.
- ஈரிணை — two yoke of oxen.
ஈர் — noun
- , ஈரு, s. a nit, the egg of a louse.
- ஈர்கொல்லி — ( ஈருளி), ஈர்வலி, ஈரு ருவி, a kind of comb, used to draw out and destroy nits.
- ஈர்வழிக்க–ஈர்த்துவிட — to comb off the nits.
ஈர் — v. t.
- v. t. cut, split, பிள; v. i. be drawn out, இழுக்கப்படு.
Tamil Moli Akarathi (1928)
ஈர் (īr)
- இரண்டு, ஈரென்னேவல், கருபும், பேன்முட்டை, முன்னிலைப்பன்மை விகுதி
ஈர் (īr)
- ஈர்தலைச்செய்யென்னேவல், மயி ரிற்பற்றுமீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஈர்³ (īr) — noun
- < ஈர்¹-மை
- Minuteness; நுண்மை. ஈரயிர் மருங்கின் (சிலப். 6, 146)
- [T. īru, K. M. īr.] Nit, Hemitera insecta; பேன் முட்டை. நித்தல மாலைபோற் றவளவீர் பொருந்தி (செவ்வந்திப்பு. உறையூ. 23)
- Rib of a palm leaf; ஈர்க்கு. இடையீர் போகா விளமுலையாளை (தேவா. 1061, 2)
- Wing; இறகு. (பிங்.)
ஈர்⁴ (īr) — noun
- < ஈரம்
- Moisture, wetness; ஈரம். ஈர்நறுங் கமழ்கடாஅத்து (கலித். 21)
- Freshness, greenness; பசுமை. இருவெதி ரீர்ங்கழை (மலைபடு. 207)
- Smoothness, oiliness; நெய்ப்பு. ஈர்பெய்யுந் தளிரொடு (கலித். 32)
- Sweetness, pleasantness, agreeableness; இனிமை. (திருக்கோ. 28.)
- Sugar-cane. See கரும்பு. (மலை.)
ஈர்⁵ (īr) — part
- 2nd pers. pl. ending as in வந் தீர்; முன்னிலைப்பன்மை விகுதி. (தொல். சொல். 226.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஈர்
- பேன் முட்டை
- முன்னிலைப் பன்மை விகுதி
- இரண்டு
- ஈரம்
- நெய்ப்பு
- பசுமை
- இனிமை
- நுண்மை
- ஈர்க்கு
- இறகு
- கரும்பு
- கதுப்பு
- திமில்
- எருத்துத் திமில்
- எருத்தின் ன்னு ல விளையாட்ட னதும் எக்