உத்தரம்

Order

Winslow (1862)

உத்தரம் (uttaram) — noun
  1. Answer, reply, rejoinder, response, ஏதிர்மொழி
  2. (p.) The north, வடக்கு
  3. Subsequence, posteriority, futurity, அபரம்
  4. Height, eminence, உயர்ச்சி. Wils. p. 141. UTTARA
  5. The final deluge of fire, ஊழித்தீ
  • உத்தரகாலம் — The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங்காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந்திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned.
  • உத்தரகிராந்தம் — The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.]
  • உத்தரகுரு–உத்தரகுருவம் — One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU.
  • உத்தரகோளார்த்தம் — Northern hemisphere, கோளத்தின்வடபாதி.
  • உத்தரகிரியை — Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA.
  • உத்தரதுருவம் — The north pole, வடதுருவம்.

Fabricius (1972)

உத்தரம் — noun
  1. north. வடக்கு
  2. what is subsequent futurity, பின்னானது
  3. word, மொழி
  4. answer, உத்தாரம்
  5. submarine fire, ஊழித்தீ
  6. beam, crossbeam in a building, விட்டம்
  7. the twelfth lunar asterism, உத்திரம்
  • உத்ரகிரியை–கரு மாந்தம் — funeral ceremony, .
  • உத்தரகுருவம்–குரு–உத்தரகுருவினொப்ப–சிலப்ப — one of the six blissful regions of beatitude of Bogha Bhumi, where the soul enjoys the fruits of former virtuous deeds. ,
  • உத்தரதுருவம் — the north pole.
  • உத்தரபாகம் — the latter part.
  • உத்தரவாதம் — defence, responsibility, pledge, security, atonement.
  • உத்தரவாதம்பண்ண–செய்ய — to atone for; indemnify become responsible guarantee, warrant.

Tamil Moli Akarathi (1928)

உத்தரம் (uttaram)
  1. உயர்ச்சி, ஊழித்தீ, சேடம், பலம், பின், மறுமொழி, வடக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உத்தரம்¹ (uttaram) — noun
  1. < ut-tara
  2. Answer, reply, rejoinder; மறுமொழி. வத்தவர் பெருமச னுத்தர நாடி (பெருங். மகத. 10, 55)
  3. Written statement filed by the defendant in a case; எதிர்வாதம்
  4. That which comes later; that which follows; பின்நிகழ்வது
  5. That which is superior; மேற்பட்டது. அதுக்குத்தரமில் லதை (உத்தரரா. திருவோலக். 4)
  6. Beam, cross-beam in a building; விட்டம். (நெடுநல். 82, உரை.)
  7. Period of the sun's progress towards the north; உத்தராயணம். (விதான. குணா. 74.)
  8. North; வடக்கு. (திவா.)
  9. Submarine fire; ஊழித்தீ. (பிங்.)
உத்தரம்² (uttaram) — noun
  1. The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉi-rāci containing Denebola or β Leonis; 12-ஆவது நட்சத்திரம்.

IndoWordNet

உத்தரம் — noun
  1. வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி.
உத்தரம் — noun
  1. ஏற்றும் செயல் அல்லது தாங்கும் செயல்

மரத்துண்டு செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உத்தரம்
  1. மறுமொழி, எதிர்மொழி, விடை
  2. எதிர்வாதம்
  3. பின்நிகழ்வது
  4. மேற்பட்டது
  5. உயர்ச்சி
  6. வடக்கு
  7. வடவைத் தீ, ஊழித் த
  8. உத்தராயனம்
  9. பன்னிரண்டாம் நட்சத்திரம்
  10. அருந்ததி