செயல்

- அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். நடத்தை, - करना

act, action, performance, deed work, operation, occupation fine workmanship

Winslow (1862)

செயல் (ceyal) — noun
  1. Agency, operations of the deity, தெய்வச்செயல். (c.)
  2. A course of good conduct, ஒழுக்கம்
  3. Guard, safe- guard, defence, protection, காவல்
  4. Mire, mud, சேறு
  5. v. noun. [ex செய்.] Act, action, doing, performance, work, தொழில். நஞ்செயலாலேது. What are our (endeavors) purposes! ஏல்லாம் அவர்செயல். It is all his (God's) doing–meaning that all are over-ruled by Providence. இப்போது அவருக்குநடக்கச் செயலில்லை He is now indisposed to go out. ஏன்கையிலேசெயலில்லை. I have no money in hand, I can't afford so much
  • செயலற — To be undone, helpless, unable to help one's self, deprived of power or energy, to faint, be motionless. 2. To fail in observance of rites, in a course of conduct, &c.
  • செயலறல்–செயலறவு — The state of being undone, helpless, unable to help one's self, deprived of power or energy, fainting, motionless. 2. Non- observance of rites, in a course of conduct, &c.
  • செயல்கெட — To be deprived of power or energy. (c.)
  • செயலறுநிலை — Affliction, want of succor. See கையறுநிலை.

Fabricius (1972)

செயல் — v. n.
  1. n. (செய்), doing, work action, தொழில்
  2. agency, operations of deity, providence, தெய்வச்செயல்
  3. safeguard, protection, காவல்
  • செயலற்றவன் — one in helpless condition or in reduced circumstances.
  • தற்செயலாய் — by chance.
  • திருவுளச்செயல் — an act of the divine will.
  • செயல்கெட — to be deprived of energy.

Tamil Moli Akarathi (1928)

செயல் (ceyal)
  1. ஒழுக்கம், காவல், செய்கை, சேறு, தொழில்
செயல் (ceyal)
  1. ஒழுக்கம், காவல், சேறு, தொ ழில், வியங்கோண்முற்று

IndoWordNet

செயல் — noun
  1. வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.
செயல் — noun
  1. உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

வினை காரியம் சொல் செயப்படுபொருள் செயப்படுபொருள் வினை விளைவு அடுக்கு செய்கை வேலை பணி விளையாட்டு ஆட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செயல்
  1. தொழில்
  2. பொருள் தேடுகை
  3. இழைப்பு வேலை
  4. வேலைப்பாடு
  5. காவல்
  6. ஒழுக்கம்
  7. வலிமை
  8. செல்வாக்கு
  9. செய்யல்
  10. நிலைமை
  11. சேறு

Tamil Wiktionary

செயல் — பெயர்ச்சொல் (Noun)
  1. நடத்தை
  2. வினை.

[object Object], [object Object]

செய் அல் செயலாளர் செயலர் செயல்திறன் செயல்வீரன் செயல்முறை செயற்கை செயல்படு செயல்படுத்து செயலிழ செயலாற்று செயல்பாடு செய லிழப்பு செயலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செயல் (ceyal) — noun
  1. < செய்-
  2. [M. ceyal.] Act, action, performance, work, operation; தொழில். கழலிணை கடந்தருளுஞ் செயலை (திருவாச. 11, 17)
  3. Acquisition, as of wealth; பொருள் தேடுகை. மலையிறந்து செயல் சூழ்ந்த பொருள் (கலித். 2)
  4. Engraving; carving; setting work in jewellery; இழைப்பட வேலை. வயிரச் செயல்தாலி மணிவடம் (S. I. I. ii, 16)
  5. Fine workmanship; வேலைப்பாடு. இந்தச் சங்கிலி செயலாக உள்ளது. Loc
  6. Safeguard, protection, watch; காவல். (பிங்.) (செயலைச் செற்ற பகைதெறுவான் (கம்பரா. வாலிவதை. 86)
  7. Behaviour, conduct; ஒழுக்கம். (சூடா.)
  8. Power, energy; வலிமை. இப்போது அவனுக்கு நடக்கச் செயலில்லை
  9. Influence; செல்வாக்கு. Colloq
  10. State, circumstance; நிலைமை. அவன் நல்ல செயலில் இருக்கிறான்
  11. See செய்யல்
  12. (அக. நி.)